சென்னை: தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விஜய் பிரச்சாரத்தில் நாமக்கல் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமின் கோரி,  தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணையின்போது,  அரசு வழக்கறிஞர், நாமக்கல்லில்  விஜய் தபிரசாரத்தின் போது தனியார் மருத்துவமனை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாமக்கல் தவெக மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது மேலும் 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, தவெக மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? என்றும் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.