தருமபுரி:: திமுக அரசு திவால் ஆகிவிட்டது  என்று கடுமையாக  விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும், கரூரில் 41பேர் பலியான சம்பவத்துக்கு திமுக அரசே பொறுப்பு என்று மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார்.,

திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு ஜால்ரா அடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். ஆனால், கரூர் சம்பவத்தின் மூலம் இன்று தமிழ்நாடே தலை குனிந்து இருக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இனியாவது பொதுக்கூட்டங்களுக்கு முழுமையாகப் பாதுகாப்பு தருவீர்கள் என்று நம்புகிறேன் என கூறினார்.

 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தீவிர தேர்தல் களப்பணியாற்றி வருகின்றன. அதன் ஒருபகுதியாக அதிமுக பொதுச்செயலாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அவரது பயணம் தற்போது தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்ட பிரசாரத்தின்போது,  கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தில் உயிரிழந்த 41 நபர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், “கரூரில் தவெக பரப்புரையின் போது அரசு உரிய பாதுகாப்பை வழங்கியிருந்தால், 41 பேரின் உயிர் போயிருக்காது.

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி.. எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? நாட்டு மக்களை பாதுகாக்கக்கூடிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. பொதுக்கூட்டங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. சரியான முறையில் காவல்துறைக்கு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்தால் 41 உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். இதற்கெல்லாம் 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். ஆனால், கரூர் சம்பவத்தின் மூலம் இன்று தமிழ்நாடே தலை குனிந்து இருக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இனியாவது பொதுக்கூட்டங்களுக்கு முழுமையாகப் பாதுகாப்பு தருவீர்கள் என்று நம்புகிறேன்.

கரூர் சம்பவத்தை எப்படி துறை செயலாளர்களைக் கொண்டு செய்தியாளர்களை சந்திக்கலாம். மக்கள் வரிப்பணத்தில் தான் அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். துறை செயலாளர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். தவறான செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது அதிமுக ஆட்சி அமைத்த பிறகு நடவடிக்கை எடுப்போம்.

திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் திமுகவுக்கு ஜால்ரா அடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் ஆயிரக்கணக்கான போராட்டத்தை நடத்தினர். அத்தனை போராட்டத்திற்கும் அனுமதியும், பாதுகாப்பும் கொடுத்தோம். எந்த அசம்பாவித சம்பவமும் இல்லாமல் அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், இந்த ஆட்சியில் ஜனநாயகத்தை  பார்க்க முடியவில்லை. திமுக அரசு திவால் ஆகிவிட்டது

மு.க.ஸ்டாலின் அரசு அமைந்த பிறகு, மூன்று முறை கூட்டம் நடைபெற்றது. எப்படி உங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கிறார்கள். ஆட்சி அதிகாரம் இருப்பதால் ஆட்டம் போடுகிறீர்கள். உங்களுக்கு முடிவு கட்டுகின்ற நேரம் வந்துவிட்டது.

கடந்த அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் அதிக அளவு கடன் வாங்கியுள்ளார்கள். அந்த வகையில், திமுக ஆட்சி முடியும் போது, 5 ஆண்டுகளில் 5 லட்சத்து 36 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருப்பார்கள்.  திமுக ஆட்சியில் 67 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.  தமிழக அரசு (திமுக அரசு) திவால் ஆகிவிட்டது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தமிழ்நாட்டில் கிராமம் முதல் நகரம் வரை எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்காத இடமே கிடையாது. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றுவதாகப் பொய் வாக்குறுதி அளித்துள்ளார்கள். இதற்கு பணம் எங்கே இருக்கிறது? ஆட்சி முடியும்போது ஏமாற்றுவதற்காக அறிவித்துள்ளார்கள்.

அதுமட்டுமின்றி, அனைத்திற்கும் வரி.. குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசு திமுக அரசாங்கம்தான். திமுக ஆட்சியில் 67 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு தெம்பு திராணி இருந்தால் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லட்டும்” என ஆவேசமாக பேசினார்.

திமுகவுக்கு தெம்பு திராணி இருந்தால் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லட்டும்” என ஆவேசமாக பேசினார்.