சென்னை: திருவண்ணாமலையில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தர், சுரேஷ் ராஜ் ஆகிய இரண்டு போலீஸ்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

வேலியே பயிரை மேயந்த கதையாக, திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணை, சகோதரி முன்பே இரண்டு காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் பரபரப்பையும், மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் திமுக அரசுமீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பணியிடை செய்யப்பட்டனர். ஆனால், அவர்களை பணி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் கோரி எழுந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட சுந்தர், சுரேஷ் ராஜ் ஆகிய இரண்டு போலீஸ்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். . இந்த இரு காவலர்களும் திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்தவர்கள்.
முன்னதாக செப்டம்பர் 29ந்தேதி அன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்கோயிலுக்கு சாமி தரிசனம்செய்வதற்காக, தாயுடன் இளம் பெண்வந்துள்ளார். இருவரும், வாழைத்தார் ஏற்றி வந்த மினி வேனில் லிஃப்ட் கேட்டு இருவரும் வந்தனர். நள்ளிர சுமார் 2மணி அளவில் அந்த வாகனத்தை இடைமறித்த காவலர்கள் இருவரும் வாகனத்தில் இருந்த பெண்க குறித்து விசாரித்துள்ளனர். அப்போது வாகன ஓட்டுநரிடம் போலீசார் இருவரையும் இறக்கிவிட்டுட்டு, நீங்கள் வாழை தாரை இறக்கி விட்டு வாருங்கள் என்று கூறிணுயதுடன், அந்த பெண்களை கோயிலுக்கு அழைத்துச் சென்று விடுகிறோம் என்று கூறியதாக தெரிகிறது. அதனை ஏற்க மறுத்த ஓட்டுநர் இருவரையும் வண்டியில் ஏற்றிச் செல்வதாகக் கூறியுள்ளார்.
ஆனால், ஏற்க மறுத்த போலீஸார் ஓட்டுநரை மிரட்டி இளம் பெண் மற்றும் அவரது தாயை தங்களது இரண்டு பைக்கில் அழைத்துச் சென்று ஏந்தல் கிராமம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இளம் பெண்ணை தாய் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் போலீஸார் இருவரும் இரண்டு பெண்களையும் அழைத்து வந்து புறவழிச்சாலை அருகே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இரு பெண்கள் புறவழிச்சாலையில் அழுதுகொண்டு இருந்தை கண்தை, அதிகாலை சுமார் 4 மணி அளவில் அவ்வழியாகச் சென்றவர்கள் விசாரித்துள்னனர். ‘அப்போதுதான், அநத் இளம்பெண் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த ஏந்தல் பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகிய இருவர் மீதும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவருமே காவல்துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு போலீசாரையும், தற்போது பணி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.