சென்னை: தொடர் விடுமுறையையொட்டி, மூணாறுக்கு  சுற்றுலா சென்ற இளைஞர்கள்,  கார் விக்கிரவாண்டியில் ஏற்பட்ட விபத்தில்   கவிழுந்து முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் காருக்குள் சிக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

5 பேர் கொண்ட நண்பர்கள், காரில் மூணாறுக்கு  சுற்றுலா சென்ற நிலையில்,   கார் விக்கிரவாண்டியில் ஏற்பட்ட விபத்தில் திடீரென கார் முழுவதும்  தீப்பற்றி எரிந்ததில் காருக்குள் இருந்த மூவர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர்  காயங்களுடன்  மீட்கப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை மற்றும் அக்டோபர் 3ந்தேதி தமிழ்நாடு அரசின் விடுமுறை என  தொடர் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து நண்பர்கள் ஒன்றாக இணைந்து மூணாறுக்கு இன்று அதிகாலை காரில்  புறப்பட்டு சென்றனர். இவர்கள் சென்ற  காரானது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது  செண்டர் மீடியனில் மீது மோதியதுடன்,  எதிரே சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதியும் குப்புற கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து காரில் இருந்த பெட்ரோல் டேங்க் உடைந்து தீ பரவியது.

இதனால், காரில் பயணித்த ஐந்து இளைஞர்களும் காருக்குள் மாட்டிக்கொண்டனர். அவர்களை யாரும் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.   கார் மள மளவென எரிந்ததில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த இரு இளைஞர்கள் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து காயங்களுடன் வெளியே வந்தனர். பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த சம்சுதீன், ரிஷி,மோகன் ஆகிய மூவரும் காரின் கதவுகளை திறக்க முடியாததால் மூச்சு திணறியும் கார் தீ யில் சிக்கி கொண்டு பறிதாபமாக சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் கார் மீது நீரை பீய்ச்சி அடித்து விபத்தில் இறந்த மூவரின் உடலை சடலமாக மீட்டனர். மேலும் காயமடைந்த தீபக், அப்துல் அஜீஸ் ஆகிய இருவரை மீட்டு முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். விபத்தினால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தினை சரி செய்தனர்.  இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.