மும்பை: வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டியான ரெப்போவில் மாற்றமில்லை என்றும், 5.50 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.

ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான எம்பிசி குழு நாட்டில் நிலவும் குறைந்த பணவீக்கம் மற்றும் அமெரிக்க வரி கொள்கைகளால் ஏற்படும் வளர்ச்சி அழுத்தங்களை மத்தியில் இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளது. இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.5%லிருந்து 6.8% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட வலுவான பொருளாதார செயல்பாடு இதற்கு காரணம் என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்துள்ளார்.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி தொடர பணவியல் கொள்கைக் குழு முடிவு செய்தது. இதன் விளைவாக இந்த ஆண்டுக்கான சராசரி பணவீக்கம் திருத்தப்பட்டு, ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3.7% ஆகவும், ஆகஸ்ட் மாதத்தில் 3.1% ஆகவும் இருந்து 2.6% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது‘. அதேபோல இந்த மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லையென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது

கடந்த சில ஆண்டுகளாக ரெப்போ விகிதம் 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் குறைக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரியில்  0.25% குறைக்கப்பட்டு, 6.25% ஆக இருந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் (ஏப்ரல்) அது மேலும் 0.25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 0.50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாமல் 5.50 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதன் விளைவாக, STF விகிதம் 5.25% ஆகவும், MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் 5.75% ஆகவும் உள்ளது. .  இந்த ஆண்டு Q4 மற்றும் அடுத்த ஆண்டு Q1 க்கான தலைப்பு பணவீக்கம் கீழ்நோக்கி திருத்தப்பட்டுள்ளது மற்றும் சாதகமற்ற அடிப்படை விளைவுகள் இருந்தபோதிலும் இலக்குடன் பரவலாக சீரமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கான முக்கிய பணவீக்கம் மற்றும் அடுத்த ஆண்டு Q1 கட்டத்திலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படாததால் வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

அமெரிக்காவின் உயர் இறக்குமதி வரிகள் இந்திய பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கும் என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்தார். இது நாட்டின் வளர்ச்சிக்கு சவாலாக உள்ளது என வெளிப்படையாக தெரிவித்தார்.  மேலும், இந்தியாவின் கோர் பணவீக்கம் 4.2சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

ஆர்பிஐ இந்த வருடம் 1 சதவீதம் வரையில் ரெப்போ விகிதம் குறைத்துள்ள வேளையில், வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் 0.58 சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக ஆர்பிஐ கவர்னர் தெரிவித்துள்ளார்.

ஆர்பிஐ நாணய கொள்கை முடிவுகள் வெளியிட்டுக்கு பின்பு சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்ந்துள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 24,650 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது.