சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

நடிகர் திலகம் என மக்களாலும், திரை உலகத்தினராலும் அழைக்கப்பட்டவர் செவாலியே புகழ் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவரது 98வது பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள், குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும்அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாளான இன்று சென்னை அடையாறு, தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள், மேயர் ஆகியோர் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
