சென்னை; நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தீர்ப்பை செப்டம்பர் 30ந்தேதிக்கு குடும்ப நல நிதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் காதலித்து, கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவரும் ஒரே பள்ளியில் படித்தபோது காதல் தோன்றியதாக கூறினர். இதையடுத்து திருமணம் செய்து சுமார் 12 ஆண்டு காலம் குதுகலமாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
இநத் நிலையில், கடந்த ஆண்டு இவருக்கும் இடையே மனக்கிலேசம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் சில காலம் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், பின்னர் சட்டப்படி பிரிந்துசெல்ல முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 2024ம் ஆண்டு ஏப். 24-ஆம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் நேரில் ஆஜராகி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தனா்.
இதைத்தொடர்த்நது, சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, இருவரையும் நேரில் ஆஜராகி உத்தரவிட்டு வழக்கை விசாரித்து வந்தார். அப்போது, இருவரும், தங்களின் நிலைபாட்டை தெரிவித்தனர். மேலும், குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி. பிரகாஷ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 25ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இநத் நிலையில், தற்போது தீர்ப்பு வரும் 30 ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இருவரும் தங்களின் விவாகரத்து நிலைபாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில், விவாகரத்து கிடைப்பது உறுதியாகி உள்ளது.