சென்னை: ரூ.36 கோடி வருமான வரி பாக்கி தொடர்பான வருமான வரித்துறைக்கு எதிரான  ஜெ.தீபாவின் மனுவை சென்னை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.36 கோடி வருமான வரி  பாக்கியை, அவரது சட்ட வாரிசுதாரரான ஜெ.தீபா செலுத்த வேண்டும் என வருமான வரி நோட்டிஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்த ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானவரி வழக்கில் ரூ.36 கோடி பாக்கி இருப்பதாகவும் அதனை செலுத்த வேண்டும் என்று அவரது சட்ட பூர்வ வாரிசான சென்னை உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட தீபாவிற்கு வருமானவரித்துறை அண்மையில் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்த நோட்டீசை எதிர்த்து தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சி.சரவணன் முன்பு நடைபெற்றது.

விசாரணையின்போது,  ஜெயலலிதாவின் வருமானவரி சேவை ரூ.36 கோடியிலிருந்து 13 கோடியாக குறைத்து திருத்தியமைக்கப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள தாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி ரூ.36 கோடி செலுத்தக்கூடிய வருமானவரி துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என கூறி தீபாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும்,  இந்த விஷயத்தில் தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் எனவும் நீதிபதி அந்த உத்தரவில் குறிப்பிட்டார்.

முன்னதாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு காலமானார். அவர் ரூ. 36.56 கோடி வருமான வரி பாக்கி வைத்துள்ளதாகக் கூறிய வருமான வரித்துறை, அதனை செலுத்துமாறு ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்ட அவரது அண்ணன் மகள் ஜெ.தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில்  விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போத,   தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தால் வாரிசாக அறிவிக்கப்பட்ட தீபா, கட்டாயமாக வரி செலுத்த வேண்டும் என சட்டப்படி கூற முடியாது. மறைந்த ஒருவரின் பெயரில் அவரது வாரிசு வருமான வரி செலுத்த வேண்டும் என சட்டரீதியாக கோர முடியாது. கடந்த 2008 மற்றும் 2009-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடியாது. தீபா வரிமான வரி பாக்கி வைத்தவர் கிடையாது. அதனால் வரி கட்ட தவறியவர் என்ற அடிப்படையிலும் நோட்டீஸ் வழங்க முடியாது.

2007-ம் ஆண்டு வருமான வரி மதிப்பீட்டு பாக்கியை தீபாவிடம் இருந்து வசூலிக்க முடியாது. அதனால் தீபாவிடம் இருந்து 36.56 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என கேட்க முடியாது. நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். மனுவுக்கு இ டைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி,  வருமான வரி நோட்டீஸின் அடிப்படையில் வசூல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.