சென்னை: கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு  பாட தயாராக இருந்த இருந்த பிரபல இசையமைப்பாளர் சங்கர் கஷேஷ் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவின் முப்பெரும் விழா இன்று கரூரில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு, இசையமைத்து பாடுவதற்காக பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான சங்கர்ல கணேஷ் தனது குழுவினருடன் கலந்துகொள்ள இருந்தார்.  இந்த நிலையில், இன்று அதிகாலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது குடும்பத்தினர், அவரை வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவர் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் சங்கர் கணேஷ். ஏராளமான படங்களுக்கும், பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார். ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம,  வாராய் கண்ணா உள்ளிட்ட  பல பாடல்கள் இவரது இசையமைப்பில் உருவானவை.  சில ஆண்டுகள் தமிழக திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளளராக இருந்த இவர், கழுத்தில் நகை மற்றும் கைகளில் கையுறை அணிந்திருப்பார். இவர் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நிலையில்,  இன்று கரூரில் நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பாடல் பாடுவதற்காக தயாராகி மாநாட்டிற்கு செல்ல இருந்த நிலையில் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.