டெல்லி: செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என  தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இலவசம் கொடுக்க பணம் இருக்கும்போது, செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க பணமில்லையா என கேள்வி எழுப்பியதுடன், அவர்களுக்கு சம்பளம் கொடுக்க  வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என கூறியதுடன், அதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.

முன்னதாக,  தமிழ்நாடு அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்படுகிறார்கள். இவர்களுக்கு குறைந்த அளவே சம்பளம் வழங்கப்படுகிறது.  அதாவது,  ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படும் செவிலியர்களுக்கு முதல் கட்டத்தில் மாதம் ரூ.7,700 சம்பளம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ரூ.14 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.18 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

அதே வேளையில்,  நிரந்தர பணியில்  செவிலியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் சில மடங்கு அதிகாமாக வழங்கப்படுகிறது.  அதாவத,  நிரந்த செலிவியர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.ஆனால், பெரும்பாலான பணிகள் ஒப்பந்த செவிலியர்கள் மூலம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில்,   சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதம் ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களுக்கும் நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில்   வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் கோரிக்கையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனுமீது திபதி விக்ரம்நாத் அமர்வு விசாரித்தது இன்று விசாரணை நடத்தியது.

  அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  நிரந்தர செவிலியருக்கு இணையாக ஒப்பந்த செவிலியருக்கு ஊதியம் தர போதுமான நிதி இல்லை என்று கூறியதுடன்,   மத்திய அரசிடம் உரிய நிதி கிடைக்காததால் ஒப்பந்த செவிலியருக்கான ஊதியம் நிலுவையில் உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழ்நாடு அரசு சுரண்டுகிறது என கடுமையாக சாடியதுடன், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியது மாநிலஅரசின் பிரச்சினை என்று கூறியதுடன்,

எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். ஒரு தனித்திட்டத்தை ஏன் தொடங்கக்கூடாது? ஊதியம் தரவேண்டியது உங்கள் பொறுப்புதான். இலவசங்களுக்கு கொடுக்க பணம் இருக்கிறது; ஆனால் பணி செய்பவர்களுக்கு தர பணம் இல்லையா?  என கேள்வி எழுப்பியதுடன்இ,  இதுகுறித்து 

மத்திய அரசு, செவிலியர் சங்கம்  4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.