கோபி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10நாள் கெடு விதித்து வாய்சவடால் விட்ட செங்கோட்டையனின் கெடு பிசுபிசுத்து போனது. அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் எடப்பாடி நீக்கிய நிலையில், தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன் என சாஃப்டாக தெரிவித்து உள்ளார்.

எடப்பாடியுடன் கருத்து வேறுபாட்டில் இருந்து வந்த செங்கோட்டையன், எடப்பாடியின் சுற்றுப்பயண நிகழ்ச்சியை முழுமையாக புறக்கணித்த நிலையில், அவர் திமுக உள்பட மாற்றுக்கட்சியில் சேர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், தான் செப்டம்பர் 5ந்தேதி செய்தியாளர்களிடம் பேசுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அன்று (செப் 5) அன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஏதாவது முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கட்சியில் இருந்த பிரிந்துசென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், அவருக்கு 10 நாட்களுக்குள் இதை செய்யாவிட்டால் நாங்களே செய்வோம்’ என்று கெடு விதித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால், அவரது கெடுவை கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையனின் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார். மேலும் அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்டோரின் பதவிகளும் பறிக்கப்பட்டது. ஈரோட்டை சேர்ந்த நிர்வாகிகள் சிலரை அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இது அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருதரப்பினர் எடப்பாடியின் நடவடிக்கைதான் சரி கூறத்தொடங்கினர். இதனால் விரக்தியடைந்த செங்கோட்டையன் கடந்த 7-ந்தேதி டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
பின்னர் டெல்லியில் செய்தியளார்களிடம் பேசும்போது, ‘அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். கட்சியை வலுப்படுத்த வேண்டும்’ என்று அமித்ஷாவிடம் பேசியதாக தெரிவித்தார்.
இந்த சலசலப்புக்கு மத்தியில், செங்கோட்டையனின் கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், இந்த கெடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பிக சொல்லப்போனால், செங்கோட்டையனையே அவர் மதிக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமானது.
இந்த நிலையில், இன்று அண்ணா பிறந்தநாளையொட்டி, கோபிசெட்டிப்பாளையத்தில் பேரறிஞர் அண்ணா படத்திற்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எம்.ஜ்.ஆர் உருவாக்கினார். ஜெயலலிதா அதனை கட்டி காத்து வளர்த்தார். அதிமுக ஒன்றினையும் விவாகரத்தில் தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன். இது புரியவேண்டியவர்களுக்கு புரியும் என்று விரக்தியாக கூறினார்.மேலும், அண்ணாவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அதிமுக 2026 தேர்தலில் வெற்றி பெற எல்லாரும் உறுதுணையாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியதுடன், அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்துக்கு பலரும் ஆதரவு அளித்தனர், தொண்டர்களின் கருத்தையே நான் பிரதிபலித்தான் என்றும் தெரிவித்தார்.
செங்கோட்டையனின் பேட்டியில் எந்தவொரு விறுவிறுப்பும் இல்லாததுதுடன், அவரது கெடு வெறும் வாய்ச்சவடால் என்பதை உறுதை செய்துள்ளது. மேலும், அதிமுகவில் இருந்து விலகினால் செல்லாகாசாகி விடுவோமோ என்ற பயத்துடனேயே இன்றைய செந்தியார்கள் சந்திப்பு இருந்ததுடன், எடப்பாடியை எங்கேயும் விமர்சிக்காத நிலையே காணப்பட்டது.