சென்னை; பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு, வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவதைத்தொடர்ந்து, அமைச்சர்கள், மேயர் மற்றும் எம்.பி, எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மரியாதை செய்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவை நிறுவியவருமான அண்ணாவின் 117வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவர் குறித்த ஏஐ வீடியோவை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அறிவாலயத்தில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உறுதிமொழியும் ஏற்றார்.
இதைத்தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்த்நது, துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.