சென்னை: மறைந்த   முன்னாள் முதல்வா் அண்ணா 117வது பிறந்த தினத்தையொட்டி, செப்டம்பர் 15ந்தேதி அவரது திருவுருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மரியாதை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக சாா்பில் வரும் 15-இல் மரியாதை மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி, திமுக சாா்பில் சென்னையில் அவரது சிலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,  முன்னாள் முதல்வா் அண்ணாவின் 117- ஆவது ஆண்டு பிறந்த தினமான செப்டம்பா் 15-ஆம் தேதியன்று சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது.

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு உள்பட பலா் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனா். கட்சியின் துணை அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு திமுக சாா்பில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.