சென்னை: சென்னை கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்தை ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சமீபத்தில் திருடுபோனது. இந்த சம்பவம் பேருந்து பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது. சென்னை டூ திருப்பதி இயக்கப்படும் இந்த அரசு பேருந்து பட்டப்பகலில் திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதுகுறித்து காவல்துறையில் சம்பவத்தன்று மாலை புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை சம்பவத்தன்று காலை 7.30 அளவில் மர்ம நபர் யாரோ எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்தது. ஆனால், இந்த திருட்டு குறித்து போக்குவரத்து துறை பணியாளர்கள், மாலைதான் கோயம்பேட்டில் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்கள்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திவந்த நிலையில், இந்த பேருந்து, ஆந்திர மாநிலம் நெல்லூரில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு காவல்துறை வாகன சோதனையின் போது சிக்கிருக்கிறது. ஒரு வாலிபர் அந்த வாகனத்தை பேருந்தை ஒட்டி சென்று இருக்கிறார். இதுகுறித்து அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணையி நடத்திய நிலையில், அவர் முன்னுக்கு பின்னாக பதில் தெரிவித்ததால், சந்தேகம் அடைந்ததுடன், பேருந்தையும், அவரையும் ஆந்திர காவல்துறையினர் மடங்கியதுடன், இதுகுறித்து தமிழக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, கோயம்பேடு காவல் நிலையத்திற்கு. உடனடியாக காவல் துறையினர் அங்கு சென்று பேருந்தையும், பேருந்து திருடி சென்ற வாலிபரையும் கைது செய்து சென்னை அதைத்து வந்தனர். விசாரணையில், பேருந்தை திருடிச்சென்றவர், ஆந்திர மாநிலத்து சேர்ந்தவர் ஞானராஜன் சாகு என்பது தெரிய வந்தது. அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசு பேருந்து திருடிச்சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காலையில் பேருந்து திருடு போன நிலையில், அதுகுறித்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மாலைதான் தெரிய வந்துள்ளதும், அதன்பிறகே புகார் கொடுக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அரசு ஊழியர்கள்மீதான பொறுப்பின்மையை காட்டுகிறது.