சென்னை: பிரபல போத்தீஸ் நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடு என 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பரபரப்பு நிலவுகிறது.

தமிழகத்தில் பிரசித்திபெற்ற துணிக்கடைகளில் ஒன்று  “போத்தீஸ்” ஜவுளி கடைகள். இது முதலில் நெல்லையில் இருந்த நிலையில், தற்போது சென்னை உள்பட பல பகுதிகளில் கிளைகளை நிறுவியுள்ளது. மேலும், ஜவுளி மட்டுமின்றி  தங்க ஆபரணங்கள் விற்பனை உள்பட பல  பொருட்கள் விற்பனை செய்தும் வருகிறது.

இந்த நிறவனத்துக்கு திருநெல்வேலி,  மதுரை, சென்னை,, நாகர்கோவில், திருச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட 15 இடங்களில்  கடைகள் உள்ளன. இதுதவிர போத்தீஸ் “சொர்ண மஹால்” என்ற பெயரில் நகைக்கடை சென்னை உள்பட சில பகுதிகளில்,   உள்ளன. இந்த ஜவுளி கடைகள், நகைக் கடைகள், அலுவலகங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில்  வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.