சென்னை:  குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும்  ஆசிரியர்களும்  தங்களது கல்வித்திறனை மேம்படுத்தி இருப்பதை நிரூபிக்கும் வகையில், 5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  தமிழ்நாடு அரசு சிராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

டெட் தேர்வால், , தமிழக ஆசிரியர்களில் சுமார் 1லட்சத்துக்கு 30ஆயிரம் ஆசிரியர்கள்  பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக  என கூறும் தமிழ்நாடு அரசு, இந்த தேர்வை எதிர்கொள்ள ஆசிரியர்களுக்கு தகுதியில்லையா அல்லது அவர்கள் தங்களது தகுதியை உயர்த்திக்கொள்ள விரும்பவில்லையா  என்பதை கூற மறுத்துவிட்டது.

வளர்ந்து வரும்  சூழலுக்கு ஏற்ப ஆசிரியர்களும், மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் வகையில் தங்களது திறனை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில்,  இன்றுவரை வெறும் ஆசிரியர் பயிற்சி பணி முடித்துவிட்டு பணிக்கு சேர்ந்தது பணியாற்றி வருகிறார்கள். பலருக்கு முறையாக ஆங்கிலம்  வாசிக்க மற்றும் பேச தெரியாதவர்களும், தற்கால விஞ்ஞான வளர்ச்சிகள் குறித்து தெரியாவதர்களாகவும் பல பேர் உள்ளனர். இதனால், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச  டிகிரி கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளதுடன், ஆசிரியர்களுக்கான தொழிற்கல்வியான பிஎட் கட்டாயம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிகளில் இதுபோன்ற எந்தவொரு தரமும் ஆசிரியர்களுக்கு நியமிக்கப்படவில்லை. இதனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET – Teacher Eligibility Test) எழுதுவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்பு இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.ஆசிரியர் பணியில் உள்ளவர்களின் கற்பித்தல் திறனையும், தகுதியையும் உறுதிப்படுத்துவதற்காகவும், அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் டெட் தேர்வு வழிவகுக்கும் என்று கூறியது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவு தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அனைவருக்கும் பொருந்தும். T ET தேர்வு, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், பாடத்திட்ட அறிவு மற்றும் கல்வி முறைகளில் திறமையை மதிப்பிடுவதற்கு ஒரு முக்கியமான அளவுகோலாக உள்ளது.  இந்தத் தேர்வை வெற்றிகரமாக முடிப்பது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திறம்பட கற்பிக்க தேவையான அடிப்படைத் திறன்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது.

ஆசிரியர்கள் தற்கால மாணவர்களை எதிர்கொள்ளும் வகையில்,   தங்களது கல்வித்திறனை வளர்த்து கொள்ள வேண்டியதும் அவசியம்.  அதனால் பல கல்வியாளர்கள் உத்தரவை வரவேற்கின்றனர். இந்த முடிவு அரசு பள்ளி மாணவர்களின் நலனை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது

ஆனால், தமிழ்நாட்டில், இது அரசியலாக்கப்படுகிறது.   நீதிமன்றத்தின் உத்தரவால் ஆசிரியர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ள நிலையில், அதை முறையாக கையொணடு கல்வித்தரத்தை உயர்த்த வேண்டியது மாநிலஅரசின் கடமை. ஆனால், திமுக அரசோ, தங்களது வாக்கு வங்கிக்காக ஆசிரியர்களை கைவிடமாட்டோம் என பயமுறுத்தி உள்ளதுடன், தேவையற்றதை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி  வருகின்றது.

டெட் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக தமிழ்நாடு அரசின் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும்,  அதேபோல், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது என கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தை சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சொல்வது போல சுமார் 1லட்சத்து 30ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால்,  அவர்களால் தகுதி தேர்வு எழுத முடியாதா / அல்லது அதை எழுத அவர்களுக்கு தகுதியில்லையா என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகி வருகிறது.. தகுதியற்ற ஆசிரியர் களுக்கு எதற்கு அரசு பணி. எதற்கு லட்சக்கணக்கில் சம்பளம் என சமுக வலைதளங்களில்  கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

‘டெட்’ கட்டாயம்: ஆசிரியர்கள் 5ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘டெட் தேர்வு’ எழுதி தேர்ச்சி பெற வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி