கிருஷ்ணகிரி: ஓசூரில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மாநாட்டில்,  92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன என குறிப்பிட்டார்.

ஏற்கனவே தூத்துக்குடியில் கடந்த ஆண்டு இதுபோல தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்ற நிலையில், அதைதொடர்ந்து  தற்போத ஓசூரில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஒசூரில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள்  இரண்டு நாள் மாநாடு  நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று காலை தொடங்கி வைத்தார்.

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடிக்கு 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. ரூ.24,307 கோடி முதலீடுகள் மூலம் 49,353 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.