சென்னை: டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 10ந்தேதேதி வரை நீட்டிப்பு  செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு 5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் தேர்வு கட்டாயமாகி உள்ளது.  இந்த நிலையில், தமிழ்நாட்டில் டெட் தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான கால அவகாசம் செப்டம்பர் 8ந்தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில்,  ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு  செயது ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக,  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் ,  ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க 8-ந் தேதி (நேற்று) வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10-ந் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.