சென்னை: மிலாதுன் நபியை முன்னிட்டு, செப்டம்பர் 5ம் தேதி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தீபாவளி, பொங்கல்  மற்றும் விஷேச நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என அனைத்து மதத்தினரும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.  ஆனால், தமிழ்நாடு அரசு வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, ஒருசில தேசிய விடுமுறை தினங்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளை மூடுகிறது. இருந்தாலும், பல இடங்களில் திருட்டுத்தனமான  டாஸ்பாக் விற்பனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள்   குறைந்தபட்சம்  வருடத்திற்கு  8 நாட்கள் மூடப்படுகிறது. அதாவது,  திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி (வடக்கன்ஸ் பண்டிகை), வடலூர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்தநாள், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில் விடுமுறை விடப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களிலும் டாஸ்மாக் கடைகளுக்க விடுமுறை அளிக்க வேண்டும் எனல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  நபிகள் நாயகம் பிறந்த நாளான  மிலாதுன் நபியை   முன்னிட்டு தமிழகம் முழுவதும் செப்டம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அன்றைய தினம் தடையை மீறி மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.