பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 13 ஆம் தேதி இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் செல்ல வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிசோரம் செல்ல உள்ள பிரதமர் மோடி பைராபி-சாய்ராங் ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.

பின்னர் அங்கிருந்து மணிப்பூர் செல்லும் மோடி அங்கு சில உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளதாக மிசோரம் மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருப்பினும், மோடியின் மணிப்பூர் பயணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும், மிசோரம் மாநில அதிகாரிகளும் இதை உடுத்திப்படுத்தவில்லை.

இதற்கிடையில், பிரதமரின் வருகைக்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்ய மிசோரம் தலைமைச் செயலாளர் கில்லி ராம் மீனா திங்களன்று பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். மோடியின் வருகையைக் கருத்தில் கொண்டு மணிப்பூரில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் 28 மாதங்களாக வன்முறை நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக பிரதமர் அங்கு செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.