சென்னை: சென்னையில் புரசைவாக்கம் உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் ஆகஸ்டு 30ந்தேதி அன்று தங்க வியாபாரம் முறைகேடு தொடர்பாக பூக்கடை , மீனபாக்கம் உள்பட பல இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
புரசைவாக்கத்தில் உள்ள அரவிந்த் வீட்டு மற்றும், அவருக்கு சொந்தமான இடங்களில், அவரது குடும்பத்தினரின் வீடுகள் என கே.கே.நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
புரசைவாக்கத்திற்கு 2 வாகனங்களில் வந்த 8 அதிகாரிகள் தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் துப்பாக்கி ஏந்திய 2 காவலர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
தியாகராயகநகரில் ஆடிட்டர் விஜயராகவன் என்பவரது வீட்டிற்கு அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். ஆடிட்டர் விஜயராகவன் கடந்த ஆண்டி இறந்துவிட்டார் என்பது தெரியவந்ததால் சோதனை நடத்தாமல் அதிகாரிகள் திரும்பினர்.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே முழு விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.