திருவண்ணாமலை: திருவண்ணாமலை  மாவட்டம் ஆரணி அருகே பயங்கரம்  இரு தனியார் பள்ளிகளின் பேருந்துகள் மோதி விபத்து விபத்துக்குள்ளாது. இதில் 25 மாணவர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்து ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து இன்று காலை மாணவ மாணவிகள் வழக்கம்போல பள்ளிகளுக்கு கிளம்பினர். அதுபோல,  திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி அருகே உள்ள தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் பள்ளி பேருந்துகள் மூலம் தங்களது பள்ளிகளுக்கு சென்றனர். அப்போது, இரு  தனியார் பள்ளிப் பேருந்துகள் திர்பாராதவிதமாக மோதி விபத்தக்குள்ளானது,  ஆரணி அருகே உள்ள  சீனிவாசபுரம் கூட்டுரோடு அருகே இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த  விபத்தில் பள்ளிப் பேருந்தில் சென்ற 25 மாணவ, மாணவியருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவ, மாணவியர் 25 பேருக்கும் தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தைக்கண்ட அக்கம்பக்கத்தினர், குழந்தைகள் மீட்டனர். மேலும் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும்,  பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.