தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் அனுப்பும் ஏவுதள கட்டுமான பணியை இஸ்ரோ தலைவர் நாராயணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இ,தைத்தொடர்ந்து,. இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்தில் உள்ள ஏவுதள பகுதிக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அடுத்த 3 மாதத்தில் சிறிய ரக ராக்கெட் ஏவப்படும் என்றும் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கான குலசேகரன்பட்டினத்தில் 2200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தபபட்டு கடந்த 2024-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல்லை நாட்டினார்.
இதைத்தொடர்ந்து 2025 மார்ச் 5ந்தேதி அன்று பூமி பூஜையுடன் கட்டுணமாகளை தொடங்கியது. இந்த பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அங்கு அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் ஏவுதள பகுதிக்கான பணியை அடிக்கல் நாட்டி பணியை தொடக்கிவைத்தார் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். இதற்கா . இந்த நிகழ்வில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏராளமனோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக் கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது.
இன்றைய நாள் ”இந்திய விண்வெளி நாளில் மிக முக்கிய நாள். ராக்கெட் லாஞ்ச் செய்யப்படும் இடம் மற்றும் கட்டுமான பணிகள் இன்று 100 கோடி மதிப்பில் தொடங்கப்பட் இருப்பதாக கூறியவர், அடுத்த ஆண்டு (2026) நவம்பர் மாதத்தில் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும். இதற்கான இடம் வழங்கிய தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி.
இங்கிருந்து வரும் மூன்று மாத காலத்திற்குள் ஒரு சிறிய ரக ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இங்கிருந்து ஏவப்பட உள்ள ராக்கெட் சிறிய அளவிலான ராக்கெட் என்று நினைக்க வேண்டாம். 500 கிலோ எடை கொண்ட ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இஸ்ரோவின் பணி கூட்டு முயற்சி. 20 பணியாளர்கள் இதற்கு பின்னால் உள்ளார்கள். தனியார் ராக்கெட்டுகளும் இங்கிருந்து ஏவப்படும். அடுத்த ஆண்டு டிசம்பருக்கு அனைத்து பணிகளும் நிறைவடையும். குலசேகரப்பட்டினம் இந்திய வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இங்கிருந்து வருடத்துக்கு 25 ராக்கெட் வரை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இஸ்ரோ நிறுவனத்துக்கு ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. இந்தியாவின் செயற்கைக்கோள்கள் அங்கிருந்துதான் ஏவப்பட்டு வருகின்றன . தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை தூத்துகுடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்தில் அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது.