மதுரை: மதுரையில் நடிகர் விஜய் நடத்திய தவெக மாநாட்டில் அவரை பார்க்க சென்ற ரசிகர் பவுன்சர்களால் தூக்கி எறியப்பட்ட கொடூர சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், தூக்கிய எறியப்பட்டதால் காயமடைந்த அந்த ரசிகர் தனது தாயாருடன் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ம் தேதி  பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில்தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த மாநாட்டில்கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் நடிகர் அவரது ரசிகர்களை பார்க்கும் வகையில் ரேம்வாக் மேடை அமைக்கப்பட்டிருந்து.  மாநாட்டுக்கு வந்த நடிகர்  விஜய் சுமார்  மாலை 3.30 மணி அளவில் அந்த ரேம்ப் வாக் மேடையில் வாக் சென்று  தொண்டர்களை  பார்த்து கையைச்சத்தார். அப்போது, அவரது ரசிகர்கள் தாங்கள் கழுத்தில் போட்டிருந்த தவெக துண்டை தூக்கி விசினர். சிலர் மாலைகளை வீசிர்னர், மேலும் சிலர் கட்சிக் கொடிகளை வீசியதோடு அவரை அருகில் பார்த்துவிட வேண்டும் என்று தடுப்புகளைத் தாண்டி ஏற முற்பட்டனர்.

விஜயை யாரும் நெருக்க முடியாதபடி,  ரேம்ப் வாக் செய்யும் இடத்துக்கும் அவரது ரசிகர்கள் இருக்கும் இடத்துக்கும் இடையே தடுப்புகள் போடப்பட்டிருந்தன. ஆனால், ஆர்வம் மிகுதியால் சிலர், தடைகளை தாண்டி ரேம்ப்வாக் மேடையில் ஏறினர். அவர்களை விஜய்க்கு பாதுகாப்பாக வந்த பவுன்சர்கள் அப்புறப்படுத்தினர்.

இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் விஜய்க்கு மாலை அணிவித்த நிலையில், அவரை, விஜய் பாதுகாப்பு பவுன்சர்கள், மேடையில் இருந்து தூக்கி கீழே தள்ளினர். இதனால், அவர் படுகாயம் அடைந்தார். இது பார்த்தோர் விஜய்மீது கடுமையான அதிருப்தி அடைந்தனர். பின்னர், அந்த நபருக்கு தவெக சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த  சரத்குமார் மதுரை  ன மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது தாயாருடன் சென்று புகாரளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  சரத்குமார்,   “மாநாட்டில் விஜய் ரேம்ப் வாக் வந்தார். அவரை அருகில் பார்க்கச் சென்ற போது பவுன்சர் என்னைத் தூக்கி விசினார். நான் சுதாரித்து கம்பியை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். தூக்கி வீசும் போது எனக்கு நெஞ்சுப் பகுதியில் அடிபட்டது. உடலில் எனக்கு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்திருக்கிறேன்.

இதுமாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்திருக்கிறேன். மதுரை டிஜஜி ஆபிஸிலும் புகார் கொடுக்க இருக்கிறேன்.

இதையடுத்து,  தவெக மாவட்ட பொறுப்பில் இருப்பவர்கள் என்னிடம் போன் செய்து கேட்டார்கள். நடந்ததை சொல்லிவிட்டேன். மருத்துவமனைக்கு சென்று வரும் வழியில் என்ன நடந்தது என்று பலரிடம் என்னிடம் கேட்டார்கள். நான் நடந்த உண்மைகளை சொல்லிவிட்டேன்.” என்றார்.

சரத்குமாரின் தாயார் கூறுகையில், “திருச்சியில் இண்டர்வியூ என்று சொல்லிவிட்டுப் போனான். விஜயைப் பார்க்க ஆர்வமாக சென்றவனை தூக்கி வீசியிருக்கிறார்கள். என் பிள்ளை உயிர் போயிருந்தால் யார் தருவார்கள். ரசிகர்கள் பாதுகாப்பையே உறுதி செய்யமுடியவில்லையே. பிள்ளையை வளர்க்கும் பெற்றவர்களுக்குத் தான் அந்த வலி தெரியும். விஜய் தாய் மாமனாக எவ்வளவு பேருக்கு செய்துவிட முடியும்.” என்று கேள்வி எழுப்பினார்.

சரத்குமார் கொடுத்திருக்கும் புகார் மீது போலீஸ் நடவடிக்கை எடுப்பார்களா பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.