டெல்லி: நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில்  போலி ஆவணங்கள் மூலம் உள்நாட்டைச் சேர்ந்தவர்களே 18ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்கள் பெற்றுள்ளதும், இதன்மூலம்  பெரும் முறைகேடு நடந்துள்ளதும்  அமலாக்​கத்துறை விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்​தி​யா​வில் உள்ள அரசு மருத்​துவ கல்​லூரி​கள் மற்​றும் தனி​யார் மருத்​துவ கல்​லூரி​களில் வெளி​நாட்டு வாழ் இந்​தி​யர்​களுக்கு  (என்​ஆர்ஐ) குறிப்​பிட்ட சதவீதம் இடம் ஒதுக்​கப்​படு​கிறது.  அதாவதுரு,  தனியார் மருத்துவக் கல்லூரிகள் பொதுவாக தங்கள் இடங்களில் 5% முதல் 15% வரை NRIகள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்கள் (PIOக்கள்) மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்களுக்கு (OCIகள்) ஒதுக்குகின்றன,  இந்த சேர்க்கைக்கு NEET-UG அனுமதி தேவை.

அவ்வாறு இருந்தும்,  தனியார் கல்லூரிகளில் போலி ஆவணங்கள் மூலம் என்ஆர்ஐ ஒதுக்கீட்டின்கீழ் 18,000  பேர் இடம்பிடித்துள்ளது அமலாக்​கத்துறை விசா​ரணை​யில் அம்பலமாகி உள்ளது. மேற்குவங்கம் ஒடிசாவில் இந்த முறைகேடுகள்  சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாணவர் சேர்க்கையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 15சதவிகிதம் இடம் ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்களுக்கான போட்டியில், மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. சுமார் 18ஆயிரம் மாணவர்கள், போலியான என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் ஆவணங்களைக்கொண்டு, இந்திய மருத்துவ கல்லூரிகளில் MBBS படிப்புகளில் சேர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பான புகார்களின் பேரில், என்ஆர்ஐ நடத்திய விசாரணையில், 18ஆயிரம்  மாணவர்கள் போலி NRI ஆவணங்களைப் பயன்படுத்தி தனியார் மருத்துவ கல்லூரிகளில்  இடம் பிடித்துள்ளது அம்பலமாகி உள்ளது.

இதுதொடர்பாக சமீபத்தில்,  ஒடிசாவில் உள்ள மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சோதனைகளை நடத்தியது. புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்களின் வீடுகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. NRI சேர்க்கை தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் மோசடி ஆவணங்கள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக,  சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்தில் இதேபோன்ற தேடல்களைத் நடத்தியது, இந்தசோதனைகளின்போது,என்ஆர்ஐ மாணவர்  சேர்க்கைகளில் பெரிய நிதி பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட சாத்தியமான மோசடிகள் நடந்துள்ளது  தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்​தி​யா​வில்  உள்ள சில தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் எம்​பிபிஎஸ் படிப்​பில் சேரும் என்​ஆர்ஐ மாணவர்​கள் பலர் உண்​மை​யில் வெளி நாட்​டினர் இல்லை. ஆனால், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும்  ஏஜென்​டு​களுக்கு பணம் கொடுத்து   உள்நாட்டு மாணவர்களை வெளிநாடு வாழ் இந்தியர்போல காட்டும் வகையில், போலி ஆவணங்​கள் தயார் செய்​து இடம் பிடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் என்ஐஆர் ஒதுக்கீட்டில் முறைகேடாக மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாகதனியார் மருத்துவ கல்லூரிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் போலி என்ஆர்ஐ சான்றிதழ்கள் சிக்கியுள்ளன. இதுதொடர்​பாக மேற்கு வங்​கத்​தில் உள்ள ஒரு தனி​யார் கல்​லூரி வங்​கி​யில் வைத்​துள்ள வைப்பு தொகை ரூ.6.42 கோடியை முடக்​கி​யுள்​ளது.  இதே​போல் முறை​கேட்​டில் ஈடு​பட்ட சில தனி​யார் கல்​லூரி​களின்​ ரூ.12.33 கோடியை அமலாக்​கத்​ துறை ​முடக்​கி​யுள்​ளது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.