சென்னை : நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின் ஆற்றிய உரையில் காலை உணவு திட்டம் சூப்பரான சமூக முதலீடு என்றவர், ஆண்டொன்றுக்கு ரூ.600 கோடியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று  கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவத்சிங் மான் பங்கேற்று, தமிழ்நாடு அரசின் திட்டத்தை பாராட்டினார்.

சென்னை: நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மயி​லாப்​பூர், புனித சூசையப்​பர் தொடக்​கப்​பள்​ளி​யில் நடை​பெறும் விழா​வில், பஞ்​சாப் முதல்​வர் பகவந்த் மான், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்​கேற்​ற்றுள்ளனர். தற்போது 34,987 பள்ளிகளில் 17.53 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர்

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியின்போது சோதனை முறையில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும்,  2022ம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் அரசு சார்பிலேயே முழுமையாக காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டது.

மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் கடந்த   2022 ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி  இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக, பல்வேறு கட்டமாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் அரசு உதவி பெறும் கிராமபுற பள்ளிகளுக்கு  விரிவுபடுத்தப்பட்ட நிலையில்,   அதன் தொடர்ச்சியாக, தற்போது நகர்ப்புற  அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று 2025 மார்ச் 14 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, 5வது கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை  தொடங்கி வைத்தார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று காலை 8.30 மணிக்கு மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை ருசித்து முதல்வர் இந்த காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்பட்டுள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் முந்தைய பாடங்களை நினைவு கூர்வது அதிகரிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. மேலும் மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதால் ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு உள்ளது. இதையடுத்து,  தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்கள் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் காலை உணவு திட்டத்தை கனடா அரசும் தங்கள் நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டதால் அவர்களைப் போல் எனர்ஜி கிடைத்துள்ளது என்றும் 20 லட்சம் மாணவர்கள் இன்று காலை உணவு சாப்பிடுவதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் என தெரிவித்தார். காலை உணவு திட்டம் செலவு அல்ல; தமிழ்ச் சமுதாயத்துக்கான முதலீடு என்றும் 37,400 பள்ளிகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

சென்னை: ஆண்டுக்கு ரூ.600 கோடிக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது செலவல்ல, சூப்பரான சமூக முதலீடு. இக்குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பணியாற்றுவார்கள். இதுதான் இத்திட்டத்தின் உண்மையான வளர்ச்சி என்று கூறினார்.