இத்தாலியின் வெனீஸ் நகருக்குச் சுற்றுலா சென்ற அமெரிக்கப் பெண்ணிடம் பாஸ்போர்ட் மற்றும் இயர்போட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கைப்பை திருடப்பட்டது.

‘Find My’ என்ற செயலி உதவியுடன் கைப்பை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தார்.

தன்னிடம் கைவரிசை காட்டி சிக்கிய பெண்ணிடம் “எட்டு பிள்ளைகளுக்குத் தாயான என்னிடம் நீமட்டும் சிக்காமல் போயிடுவியா” என்று கொத்தாக அவரது தலைமுடியப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவரது மகள் கரீஸ் மெக்எல்ராய், “தனது தாயாரிடம் சிக்கிய அந்த பிக்பாக்கெட் திருடி தனது கையில் இருந்த கைப்பையால் எனது அம்மாவை முகத்தில் தாக்கினார்.

இதனால், முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டிய போதிலும் விடாத அவர் அப்படியே அவரை போலீசிடம் பிடித்துக்கொடுத்ததாக” பதிவிட்டுள்ளார்.