டெல்லி: இன்றுமுதல் (ஆகஸ்ட் 25 முதல்)  அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

இந்தியா மீதான அமெரிக்காவின்  கடுமையான வரி விதிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது., ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா – உக்ரைன் போரில் ரஷியாவுக்கு இந்தியா மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.  இதனால் இந்தியா மீது அமெரிக்க அதிபர் 50% என்ற கடுமையான வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள்ளார். இதற்கு ரஷியா உள்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இதைத்தொடர்ந்து, இந்திய அரசு அமெரிக்காவுக்கு எதிராக எதிர்வினையாற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக,  அமெரிக்காவிற்கான   அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.

 “கடந்த ஜூலை 30 ஆம் தேதி அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட கடுமையான வரி விதிப்பைத் தொடர்ந்து அதற்கு எதிராக வருகிற அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறை, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் பொருட்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 29 முதல் அமலுக்கு வரும் வகையில் 800 டாலர்கள் வரை மதிப்புள்ள பொருட்களுக்கான வரியில்லா விலக்கு திரும்பப் பெறப்படும் என்ற அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாக உத்தரவைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களும், அவற்றின் மதிப்பைப் பொருட்படுத்தாமல், நாடு சார்ந்த சர்வதேச அவசர பொருளாதார மின் சட்டத்தின் கட்டண கட்டமைப்பின்படி சுங்க வரிகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சகம் ஒரு வெளியீட்டில் தெரிவித்துள்ளது. இருப்பினும், 100 டாலர்கள் வரையிலான பரிசுப் பொருட்கள் தொடர்ந்து வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

800 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பொருள்களுக்கு இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இனி அது ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.  அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருள்களும் அவற்றின் மதிப்பைப் பொருட்படுத்தாமல் சர்வதேச அவசர பொருளாதார ஆற்றல் சட்டத்தின் (IEEPA)படி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். எனினும் 100 அமெரிக்க டாலர் வரையுள்ள பரிசுப்பொருள்களுக்கு மட்டும் வரிவிலக்கு அளிக்கப்படும். இதர பொருள்களுக்கு வரியை வசூலித்த பிறகே அஞ்சல் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், இதுதொடர்பாக அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைந்து அஞ்சல் துறை வளர்ந்து வரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது,  சேவைகளை விரைவில் இயல்பாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலைகளால் அமெரிக்காவிற்கு அனுப்ப முடியாத பொருட்களை ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தபால் துறை வருத்தம் தெரிவித்துள்ளது.