டெல்லி: பிரதமர் அறிவித்த ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து இறுதி முடிவு எடுக்க 3ந்தேதி மற்றும் 4ந்தேதி ஆகிய இரண்டு நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.

ஜிஎஸ்டி வரி தொடர்பாக மத்திய நிதியமைச்சர் தலைமையில் மாநில அமைச்சர்களுடன் ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் கூட்டம் அவப்பப்போது கூறி, பொருட்களின் மீதா வரி உயர்வு மற்றும் குறைப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கும். அதனன்படி, கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து மாநிலங்களின் ஆலோசனைகள் பெற்றப்பட்டது.
இந்த நிலையில், அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசின் இரண்டு-விகித ஜிஎஸ்டி திட்டம் குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
மத்திய அரசின் பரிந்துரைகளுக்கு ஏற்ப ஜிஎஸ்டி அமைப்பை இரண்டு-விகித கட்டமைப்பாக சீர்திருத்துவது உட்பட, ஜிஎஸ்டி கவுன்சில் தான் அமைத்த பல்வேறு அமைச்சர்கள் குழுக்களின் பரிந்துரைகளைப் பற்றி விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ஜி.எஸ்.டி. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது. உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பூஜ்யம் அல்லது 5 சதவீத வரி அடுக்கிலும், ஆடம்பர பொருட்கள் மற்றும் புகையிலை போன்ற பாவ பொருட்கள் 28 சதவீத வரி அடுக்கிலும் வருகின்றன. சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில், 56வது ஜி எஸ்டி கவுன்சில் கூட்டம் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 3, 4-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளி பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காலணி மீதான ஜி.எஸ்.டி.யும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.