நெல்லை: பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க நெல்லை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு நெருக்கமானவரும், திமுக செய்தி தொடர்களாக இருந்து வந்தவருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

ஏற்கனவே,  முதல்வர் ஸ்டாலினால் ஓரங்கட்டப்பட்ட  வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,  ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் திமுக ஆட்சியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில்,  நேற்று (ஆகஸ்டு 22ந்தேதி) உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார்.

பாஜக பூத் கமிட்டி மாநாடு அமித் ஷா தலைமையில் நெல்லையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக-வின் ஊழல் பட்டியலை அமித் ஷா சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்ச்சியின்போது,  மாநாட்டு மேடையில் அமித் ஷா முன்னிலையில் திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தன்னை பாஜக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்த மாநாட்டில் பேசிய அமித் ஷா “தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல், எல்காட் ஊழல், மணல் கொள்ளை ஊழல், இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூட திமுக-வின் ஊழல் செய்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமையும்” என்றார்.