சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யின் 2 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு ஒப்​படைக்​கும்  சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு  அனுமதி வழங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம்,  தூய்மை பணியாளர்கள் தற்போதும் வாங்கும் சம்பளத்தில் எத்த குறைப்பும் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது.

மத்தியஅரசை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் பல்வேறு அரசு பணிகளை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு பணிகள் அவுட்சோர்சிங் முறையில் தனியாருக்கு தாரைவாக்கப்பட்டுள்ளது. அதுபோல போக்குவரத்து கழகங்களிலும் ஒப்பந்த முறையில் பணி நியமனம் மற்றும், தற்போதைய மின்சார பேருந்து முழுவதும் தனியார் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பல பகுதிகளில் தூய்மை பணிகளும் தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள 11 மண்டலங்களில் ஏற்கனவே 11 மண்டலங்களில் தூய்மை பணிகள் தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாதம் முதல் மேலும் 2 மண்டலங்களை தனியாருக்கு ஒதுக்கியது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து இரண்டு மண்டல தூய்மை பணியாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

சுமார் 13 நாட்கள் நடைபெற்ற அவர்களின் போராட்டத்தின்போது, திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும்,  பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், ஒரு கட்டத்தில் தங்கள் தற்போது ரூ. 23,000  ஊதியம் பெற்று வருகிறோம். ஆனால், தனியார் நிறுவனங்கள்  16,000 ரூபாயாக இதனால் குறைந்துவிடுகிறதுஎன்று தெரிவித்தனர். 

இநத் போராட்டத்தை எதிர்த்து காஞ்சிபுரத்தை சேர்ந்த திமுக பெண் பிரமுகர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை  விசாரித்த உயர்நீதிமன்றம், போராட்டக்காரர்களை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, 13வது நாளான கடந்த புதன்கிழமை அன்று சென்னை மாநகராட்சிக்கு எதிரே  போராட்டம் நடத்திவந்த தூய்மை பணியாளர்கள், வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டநர்.  மேலும் போராடியவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும்   வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

இந்த  நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னை மாநகராட்சியில், தனியாருக்கு தாரைவார்ப்பது தொடர்பாக நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானத்தை ரத்து செய்ய முடி​யாது என உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்​றம், தூய்​மைப் பணி​யாளர்​கள் கடைசி​யாக வாங்​கிய சம்​பளத்தை குறைக்​காமல் வழங்க வேண்​டும் என அறி​வுறுத்​தி​ உள்​ளது.

தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கும் மாநக​ராட்​சி​யின் தீர்​மானத்தை ரத்து செய்​யக் கோரி உழைப்​போர் உரிமை இயக்​கம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. நீதிபதி கே.சுரேந்​தர் முன்பு இந்த வழக்கு விசா​ரணை ஏற்​கெனவே நடந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில், “தூய்​மைப் பணி​யாளர்​களை நிரந்​தரம் செய்​யக் கோரி தொடரப்​பட்ட வழக்கு தொழிலா​ளர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது. இந்த சூழலில், தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கு​வ​தாக இருந்​தால் தொழிலா​ளர் நீதி​மன்​றத்​தின் அனு​ம​தியை பெற வேண்​டும். மாநக​ராட்​சி​யின் தீர்​மானத்​தால் சுமார் 2 ஆயிரம் ஊழியர்​கள் வேலை இழக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது” என்று வாதிடப்​பட்​டது.

மாநக​ராட்சி தரப்பில், “சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள 5 மண்​டலங்​களில், ஏற்​கெனவே 11 மண்​டலங்​களில் தூய்மைப் பணி தனி​யாரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டு​விட்​டது. தற்​போது ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்​றும் துப்​புரவு தொழிலாளர்களுக்கு தனி​யார் நிறு​வனம் அதிக ஊதி​யத்​துடன், வருங்​கால வைப்​புநி​தி, காப்​பீடு போன்ற சலுகைகளு​டன் வேலை வழங்​கும்” என்று தெரிவிக்​கப்​பட்​டது.

ஒப்​பந்த நிறு​வனம் தரப்​பில், “தூய்​மைப் பணி​களை தனி​யாரிடம் ஒப்​படைப்​பது அரசின் கொள்கை முடிவு. இதில் விதி​மீறல் இருந்​தால் மட்​டுமே நீதி​மன்​றம் தலை​யிட முடி​யும். 1,900 பணி​யாளர்​கள் இன்​னும் தேவை என்ற நிலை​யில் அவர்​கள் பணி​யில் சேரு​வதற்​கான காலக்​கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது” என்று தெரிவிக்​கப்​பட்​டது.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி கே.சுரேந்​தர்,  துப்​புரவு பணி​களை தனி​யாரிடம் ஒப்​படைக்​கும் சென்னை மாநக​ராட்​சி​யின் தீர்​மானத்தை ரத்து செய்ய முடி​யாது. தூய்​மைப் பணி​யாளர்​களை பணி​யில் சேர்த்​துக் கொள்​வதற்​கான காலக்​கெடு நீட்​டிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அவர்​கள் பணிநீக்​கம் செய்​யப்​படு​வார்​கள் என்ற அச்​சம் தேவையற்றது. எனவே, இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி நிர்​வாகம், தனி​யார் நிறு​வனத்​துடன் கலந்​துபேசி, தூய்​மைப் பணி​யாளர்​கள் கடைசி​யாக பெற்ற ஊதி​யத்தை குறைக்​காமல் வழங்க வேண்​டும். இவ்​வாறு உத்​தர​விட்​டு வழக்​கை நீதிபதி முடித்​துவைத்​தார்​.