சென்னை: தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளிக்கான பொறியியல் கலந்தாய்வு மூன்று சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்றுமுதல் துணைகலந்தாய்வு தொடங்குகிறது. சுமார் 45ஆயிரம் இடங்கள் காலியாக உள்ள நிலையில், 16ஆயிரம் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்ற்று வந்தது. பெரும்பாலான அரசு பொறியியல் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. அதேபோல அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலும் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. தனியார் கல்லூரிகளின் நிலமை கேள்விக்குறியாகி வருகிறது.
அதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த கல்லூரிகளில், பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1.70 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2.39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதுவரை 3 சுற்று கவுன்சலிங் நிறைவடைந்துள்ளது.
இதுவரை நடைபெற்ற மூன்று சுற்று கலந்தாய்வில், 1.45 லட்சம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3வது சுற்று கலந்தாய்வில் மட்டும், 64,629 மாணவர் களுக்கு தற்காலிக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. மேலும், மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளுக்கு, ஒதுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அறிக்கையிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், மீதமுள்ள இடங்களுக்கான துணை கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 21 ஆம் தேதி ) தொடங்குகிறது. 12 ஆம் வகுப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பொது கலந்தாய்வில் பங்கேற்க தவறிய மாணவர்கள் ஆகியோருக்கான துணை கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கி 23 ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறுகிறது.
இந்தக் கவுன்சலிங்கில் பங்கேற்க 16,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பி்த்துள்ளனர். இந்த கவுன்சலிங்கிற்கான காலியிட விபரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து, தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம். துணை கலந்தாய்வு முடிவடைந்த பிறகு, பொறியியல் படிப்பில் எஸ்.சி அருந்ததியர் ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களில், எஸ்.சி மாணவர்கள் சேருவதற்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 25, 26 ஆம் தேதி நடைபெறும். அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதியுடன் ஒட்டு மொத்த கலந்தாய்வு பணிகள் முடிக்கப்படும்.
இந்தாண்டு இதுவரை பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்கள் 75 சதவீதத்துக்கு மேல் நிரப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கடந்த 6 ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்ற 423 கல்லூரிகளில், 1,87,227 இடங்களுக்குக் கலந்தாய்வு நடைபெற்றது. முதல் சுற்றுக் கலந்தாய்வில் 26,719 இடங்களும் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் 54,552 இடங்களும் நிரம்பி இருந்தன. தொடர்ந்து மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வில் 64,629 இடங்களுக்கு தற்காலிக ஆணை வழங்கப்பட்டுள்ளநிரம்பியுள்ளன. இதன்மூலம் தற்போது மொத்தம் 1,45,900 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இதனால் சுமார் 45 ஆயிரம் இடங்கள் தற்போது காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இடங்கள் துணைகலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.