டெல்லி: ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி என உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் கூறிய நிலையில், அந்த மசோ​தாக்​களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்​பது பெரும்​பான்​மை​யான மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசு என்​ப​தை​யும் மறந்​து​விடக் கூடாது என தலைமை நீதிபதி கூறியதுடன் அறுவை சிகிச்சை வெற்​றிகர​மாக முடிந்​தும், நோயாளி உயி​ரிழந்​தது போலத்​தான் என காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது.

ஆளுநர் குடியரசு தலைவருக்கு கெடுவிதித்தது தொடர்பாக, ‘குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில்  நேற்று 2-வது நாளாக நேற்று நடை​பெற்ற விசா​ரணை காரசாரமாக நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ‘நாங்கள் சட்டம் குறித்த கருத்தை மட்டுமே வெளிப்படுத்துவோம், தமிழக ஆளுநர் முடிவு குறித்து அல்ல’ என விளக்கினர்.

இந்த வழக்கில்,  “ஜனாதிபதி சில கேள்விகளுக்கு ஆலோசனை கேட்டிருக்கும்போது, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், “நாங்கள் ஜனாதிபதியின் கேள்விகளை மட்டுமே விசாரிக்கிறோம், ஏற்கனவே அளித்த தீர்ப்பை மாற்ற மாட்டோம், வெறும் ஆலோசனை மட்டுமே வழங்குவோம்” என்று தெளிவுபடுத்தினர்.

மத்தியஅரசுக்கு ஆதரவாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆவேசமாக வாதாடினார்.   ‘ஆளுநர் ஒன்​றும் தபால்​காரர் இல்​லை. அவர் மத்​திய அரசின் பிர​தி​நி​தி’ என்று மத்​திய அரசு தரப்​பில் வாதிடப்பட்​டது.  : ஒப்​புதலுக்​காக அனுப்பி வைக்​கப்​படும் மசோ​தாக்​களுக்கு ஆளுநர்கள் ஒப்​புதல் அளிக்​கலாம், மறுக்​கலாம், குடியரசுத் தலை​வருக்கு பரிந்​துரைக்​கலாம் அல்​லது திருப்பி அனுப்​பலாம் என 4 வாய்ப்​பு​கள் உள்​ளன. அந்த மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​க​வில்லை என்​றால், அவை காலா​வதி ஆகி​விட்​ட​தாகவே கருத வேண்​டும்.

இதை ஏற்க மறுத்த அரசியல்சாசன அமர்வு,.  அப்​படி​யென்​றால் மொத்த அதி​கார​மும் ஆளுநருக்​குத்​தான் உள்​ளது என்​பது​போல உள்​ளது. அந்த மசோ​தாக்​களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்​பது பெரும்​பான்​மை​யான மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசு என்​ப​தை​யும் மறந்​து​விடக் கூடாது. மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்​தால், அதுகுறித்த தகவலை சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகளுக்கு தெரிவிக்​கலாம். அதே​நேரம் ஆளுநர் காரணமின்றி ஒப்​புதல் அளிக்​காமல் நீண்​ட​கால​மாக கிடப்​பில் போட்டு வைக்க முடி​யாது. இவ்​வாறு ஒப்​புதல் அளிக்​காமல் இருப்​பது தற்​காலிக​மான​தா, நிரந்​தர​மானதா என்​பதே இந்த விவாதத்​தின் முக்​கிய கருப்​பொருள் என்றார்.

இதை ஏற்க மறுத்த சொலிசிட்​டர் ஜெனரல் ஆளுநர் ஒன்​றும் நீட்​டிய இடங்​களில் கண்​களை மூடிக்​கொண்டு கையெழுத்து போடும் தபால்​காரர் இல்​லை. அவர் மத்​திய அரசின் பிர​தி​நி​தி. மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பிர​தி​நி​தி​கள் மூல​மாக தேர்வு செய்​யப்​படும் குடியரசுத் தலை​வர் மூல​மாகவே ஆளுநரும் நியமிக்​கப்​படு​கிறார். அப்​படி​யென்​றால் இது​வும் ஒரு​வகை​யில் ஜனநாயகத்​தின் வெளிப்​பாடே. அரசி​யல், பொதுப் பணி​யில் அனுபவம் பெற்​றவர்​களே ஆளுந​ராக நியமிக்​கப்​படு​கின்​றனர். ஒப்​புதலுக்கு அனுப்​பப்​படும் மசோதா ஒரு​வரது அடிப்​படை உரிமை​களை பறிக்​கும் வகை​யில் இருந்​தால் அதற்கு ஒப்​புதல் அளிக்​காமல் இருக்​கும் சுய​விருப்​புரிமை அதி​காரத்தை ஆளுநர் அபூர்​வ​மாக பயன்​படுத்த முடி​யும் என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய  நீதிப​தி​கள் மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க மறுப்பு தெரி​விப்​ப​தற்கு பதிலாக, அதில் திருத்​தங்​களை மேற்​கொள்ள பரிந்துரைக்கலாம். ஒரு​வேளை ஒப்​புதல் அளிக்​காமல் போனால் மாநில அரசு அவரை அணுகி அந்த மசோ​தாவை திருப்பி அனுப்பி வைக்க கோரலாம். ஒரு மசோதா முதல்​முறை​யாக ஒப்​புதலுக்கு வந்​தால், அதை ஆளுநர் மறுக்​கவோ, திருப்பி அனுப்​பவோ முடி​யும். ஆனால், மறுநிறைவேற்​றம் செய்து அனுப்பி வைக்​கப்​படும் மசோ​தாக்​களை ஆளுநர் கிடப்​பில் போட முடி​யாது. ஆளுநர், பேர​வைக்​கான அதி​காரம் இரண்​டும் பலனற்​றுப் போகும் வகை​யில் செயல்​படக் கூடாது என்றார்.

பின்னர் பேசிய தலைமை நீதிபதி கவாய்  அரசி​யல் சாசன சட்​டத்​துக்​கான விளக்​கம் எப்​போதும் ஒரே நிலைப்​பாட்டை கொண்​டிருக்க முடி​யாது. குடியரசுத் தலை​வர், பிரதமர், ஆளுநர், முதல்​வர்​கள், பேர​வைத் தலை​வர்​கள் ஆகியோரின் செயல்​பாடு​களை பொருத்து மாறும். ஆளுநர்​கள் ஒப்​புதல் அளிப்​ப​தற்​கான கால நிர்​ண​யம் கடந்த காலங்​களில் இல்​லை​தான். அதனால் என்ன பயன் கிடைத்​தது. அறுவை சிகிச்சை வெற்​றிகர​மாக முடிந்​தும், நோயாளி உயி​ரிழந்​தது போலத்​தான்.

இவ்​வாறு கூறிய நீதிப​தி, வி​சா​ரணை​யை இன்​றைக்​கு (ஆக.21) தள்​ளி வைத்​துள்​ளார்​.

இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் மாநில அரசுகளின் சட்டம் இயற்றும் உரிமைகள் பற்றிய முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் மாநில அரசுகளின் சட்டம் இயற்றும் உரிமைகள் பற்றிய முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.