டெல்லி : டெல்லியில் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக முதலமைச்சர் ரேகா குப்தா மீது இளைஞர்  ஒருவர் சரமாரித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் இன்று காலை  தனது வீட்டில்  நடைபெற்ற ஜன் சன்வாய் நிகழ்வின் போது டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. முதல்வர் ரேகா குப்தா பொதுமக்களை சந்தித்த்து வந்தபோது, அங்கு வந்த   30 வயது மதிக்கத்தக்க நபர்  திடீரென முதலமைச்சரை அறைந்து, முடியைப் பிடித்து இழுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில்  முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதைகண்ட போலீசார், முதல்வர் மீட்டதுடன், குற்றத்தில் ஈடுபட்டவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் என பலரும் முதல்வரை சந்தித்து வருகின்றனர்.  முதல்வர் இல்லத்திற்கு வந்த பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால்,  செய்தியாளர்களை சந்தித்போது, முதல்வர்  பொதுமக்களிடையே சென்று பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதை   அவர் (குற்றம் சாட்டப்பட்டவர்)   பயன்படுத்திக் கொண்டு தாக்கதலில் ஈடுபட்டுள்ளார். தற்போது முதல்வர் ரேகா குப்தா  இருக்கிறார். அவர் வழக்கம் போல் பணிபுரிவார். கவலைப்படத் தேவையில்லை. போலீஸ் விசாரணை நடந்து வருகிறது” என்று கூறினார்.