சென்னை: ​ திமுக தலைமையகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயம் அருகே தேனாம்பேட்டை பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், நாளை முதல் (17ந்தேதி) மவுண்ட் ரோடு எனப்படும்  அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.

​மாநில நெடுஞ்​சாலை துறை​யினர் அண்ணா சாலை​யில் (தே​னாம்​பேட்டை சிக்​னல் – அண்ணா அறி​வால​யம் பகு​திக்கு இடையே உள்ள பகு​தி) 3.2 கி.மீ தூரத்​துக்கு மேம்​பாலம் கட்டி வரு​கின்​றனர். இந்த கட்​டு​மானப் பணியை எளி​தாக்க தேனாம்​பேட்டை அருகே நாளை (17-ம் தேதி) முதல் சோதனை அடிப்​படை​யில் போக்​கு​வரத்து மாற்​றம் செயல்​படுத்​தப்பட உள்​ளது.

இது தொடர்​பாக சென்னை போக்​கு​வரத்து போலீ​ஸார்  வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில், அண்ணா சாலை​யில் சைதாப்​பேட்​டையி​லிருந்து அண்ணா மேம்​பாலம் நோக்​கிச் செல்​லும் வாக​னங்​கள் அண்​ணா​சாலை, எல்​டாம்ஸ் சாலை சந்​திப்​பில் இடது புறம் திரும்பி தியாக​ராய சாலை, ம.பொ.சி. சந்​திப்​பு, வடக்கு போக் சாலை (வலதுபுறம் திரும்​பி), விஜய​ராகவா சாலை சந்​திப்​பு வழி​யாக அண்ணா சாலையை அடைய​லாம்.

அண்ணா சாலை​யி​லிருந்து தி.நகர் நோக்​கிச் செல்​லும் வாக​னங்​கள் அண்ணா சாலை, எல்​டாம்ஸ் சாலை சந்​திப்​பில் வலதுபுறம் திரும்பி தியாக​ராய சாலை நோக்​கிச் சென்று தங்​கள் இலக்கை அடைய​லாம்.

தி.நகரிலிருந்து அண்ணா சாலை நோக்​கிச் செல்ல விரும்​பும் வாக​னங்​கள் தியாக​ராய சாலை​யில் உள்ள ம.பொ.சி. சந்​திப்​பில் இடதுபுறம் திரும்பி வடக்கு போக் சாலை, விஜய​ராகவா சாலை வழி​யாகச் சென்று அண்ணா சாலையை அடைய​லாம்.

தெற்கு போக் சாலை​யி​லிருந்து வரும் வாக​னங்​கள் ம.பொ.சி. சந்​திப்​பில் வலதுபுறம் திரும்ப அனு​ம​திக்​கப்​ப​டாது. அதற்கு பதிலாக, வாக​னங்​கள் நேராக வடக்கு போக் சாலையை நோக்​கிச் சென்று பின்​னர் விஜய​ராகவா சாலையை அடைந்து பின்​னர் அண்ணா சாலையை அடைய​லாம்.

அண்ணா சாலை​யில் உள்ள அண்ணா மேம்​பாலத்​திலிருந்து வரும் வாக​னங்​கள் விஜய​ராகவா சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனு​ம​திக்​கப்​ப​டாது. இவ்​வாறு போக்​கு​வரத்து போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.