சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, பதிவு செய்யப்பட்ட  அரசியல் கட்சிகள் என்ற காரணமாக ஆளுநர் அளிக்கும்  தேநீர் விருந்தில் கலந்துகொள்ள தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கலந்துகொள்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகை அளித்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ள  பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில்,  இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் விஜய் கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே  தமிழ்நாடு அரசு, திமுக  மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் நிலைப்பாடு தெரியவில்லை.