இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இம்மாத இறுதியில் ரஷ்யா செல்வார் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீதி அதிகப்படியான வரி விதித்து வரும் நிலையில் இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு பலம்பெற்று வருகிறது.

சமீபத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்று ரஷ்ய அதிபர் புடினையும், மாஸ்கோவில் பல உயர் தலைவர்களையும் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 21ம் தேதி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா வரவுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தனது சமூக ஊடங்களில் பதிவிட்டுள்ளது.
அங்கு அவர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்திப்பார் என்றும் இருநாட்டு உறவு குறித்து விவாதிப்பார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், ரஷ்யா அதிபர் புட்டினையும் அவர் சந்திப்பார் என்றும் அப்போது புடினின் இந்திய வருகை குறித்து ஆலோசிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.