சென்னை: தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டு வெடிப்பில், இரு மாணவர்களின் கைகள், கண்கள் சிதைந்துள்ளது. அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் போதைக்கலாச்சாரம் கொடிகட்டி பறக்கும் நிலையில், பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்துவதில், திமுக அரசும், தமிழ்நாடு காவல்துறையும் தோல்வி அடைந்துள்ளன. இதற்கு காரணம், காவலர்களே ரவுடிகளாலும் வெட்டி கொல்லப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சட்டவிரோத போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களே ஈடுபட்டுள்ளதால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், விசாரணையில், மாணவர் ஒருவர் நாட்டு வெடிகுண்டை கல்லூரிக்கு எடுத்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
மாணவர்கள் மத்தியில், மாணவர் ஒருவர் வெடிகுண்டு திரியை இழுத்ததால் அந்த நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்ததுடன் வெடித்துச் சிதறியது. இதில் அருகே இருந்த மாணவ ஒருவரின் கண் சிதைந்து கடுமையான காயம் அடைந்த நிலையில், வெடிகுண்டை வெடிக்கச்செய்த மாணவரின் இரு கைகளும் ரத்தக்காயமாக சிதைந்த சம்பவமும் அரங்கேறி உள்ளது. மாணவன் படுகாயம் காயமடைந்த மாணவர்கள் இருவருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நாட்டு வெடிகுண்டு கொண்டு வந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, பாரதி நகர்ப் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் பரணி என்ற 17 வயது மாணவன் கல்லூரிக்கு வரும் பொழுது புத்தகப் பையில் நாட்டு வெடிகுண்டை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. புத்தகப்பைக்குள் இருக்கும் நாட்டு வெடிகுண்டை எடுப்பதற்கு இரண்டு தரப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டியில் திடீரென அது வெடித்துச் சிதறியது என்று கூறப்படுகிறது.
இதில் ஒரு மாணவருக்கு வலது கை முழுவதும் சிதறியுள்ளது. மற்றொரு மாணவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்த இரண்டு மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த நாட்டு வெடிகுண்டு திருவிழா நேரங்களில் பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டு என்பது தெரியவந்துள்ளது என காவல்துறையினர் சல்ஜாப்பு கூறுகின்றனர். ஆனால், மாணவர்களுக்கு உடள்ள முன்விரோதத்தால் மாணவன் நாட்டு வெடிகுண்டைக் கல்லூரிக்கு எடுத்து வந்த வீசியதாகவும் கூறப்படுகிறது. காரணம் அந்த மாணவன் ‘உங்களை சும்மா விடமாட்டேன்’ என எச்சரிக்கும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது, இதுபோன்ற சம்பவங்களால் உறுதியாகி உள்ளது. எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி செய்வதாக கூறி வரும் முதல்வர் ஸ்டாலின் கண்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் தெரியவில்லைபோலும்….
இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்த நாட்டு வெடிகுண்டு வெடித்து கை சிதைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர் மாதவனின் தாய் விஷ்ணு பிரியா கூறுகையில், ”எனது மகன் மாதவன் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றான். இன்று மதியம் உணவு இடைவெளியில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. அதை நாட்டுவெடி என்கின்றனர். இதில், மகனின் கை முழுவதும் சிதைந்து விட்டது. இவனால் இனி எழுத முடியாது. வாழ்க்கையில் எனது மகன் அடுத்த கட்டத்திற்கு செல்வது மிகவும் கடினம். எனது மகனின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. நல்ல சிகிச்சை கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும். இனிமேல் இதுபோன்று எந்த மாணவர்களுக்கும் நடக்கக் கூடாது. மாதவன் எங்களுடைய குடும்பத்தின் முதல் பட்டதாரி. இவனது எதிர்காலம் என்ன ஆவது?
தமிழக அரசு எனது மகனுக்கு வேலை வழங்க வேண்டும். என் மகனுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். பாலிடெக்னிக் கல்லூரியில் விரலில் சின்ன ஒரு காயம் என்று சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் கழித்து எனக்கு தகவல் தெரிவித்தனர்” என்று மாதவனின் தாய் விஷ்ணு பிரியா கூறினார்.