சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கூலி‘ திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி (நாளை) திரைக்கு வருகிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 2மணி வரை 5 காட்சிகள் திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள  ‘கூலி’ படம் , ரஜினிகாந்தின் 171வது படமாகும். இந்த படத்தின் டிரைலர், பாடல்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை கிளப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை படம் வெளியாகிறது.

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘கூலி’. நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, அமீர்கான் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.  மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

முழுக்க முழுக்க சண்டை காட்சிகளை மையமாக வைத்து, கமர்ஸியல் கதைக்களமாக உருவாகியுள்ள கூலி திரைப்படம் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மேலும், இப்படத்தின் பாடல்களும், ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியான டிரெய்லரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம்  நாளை  (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளது.   மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், கூலி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு மட்டும், இதுவரை 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

 அதன்படி, ரிலீஸ் நாளில் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளைத் திரையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.‘