சென்னை: டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள குரூப்2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். அரசு பணிக்கான தேர்வு எழுந்த விரும்புபவர்கள் இன்றே அப்ளை பண்ணுங்கள்..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுக்கான (Group 2 & 2A) அறிவிப்பு கடந்த ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இந்தத் தேர்வுக்கு, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 மற்றும் குரூப் 2A உள்ளிட்ட அரசுத் தேர்வுகளை நடத்துகிறது. இந்நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பிரிவுகளில் 645 காலி பணியிடங்கள் கடந்த ஜூலை 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தன.
மொத்தம் 645 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன: குரூப் 2 (நேர்காணல் பதவிகள்): 50 இடங்கள் குரூப் 2A (நேர்காணல் இல்லாத பதவிகள்): 595 இடங்கள்
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்காணலிலும் தேர்ச்சி பெற்றால், அரசின் உயர்ந்த பதவிகளை பெற முடியும். இவர்களின் குறைந்த பட்ச சம்பளம் ₹36,900–₹1,35,100 (நிலை 16-18). குரூப் 2A (நேர்காணல் இல்லை) தேர்ச்சி பெற்று பணி பெறுபவர்களின் குறைந்த பட்சம் சம்பளம் ₹19,500–₹1,15,700 (நிலை 8-16, பதவியைப் பொறுத்து மாறுபடும்).
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (ஆகஸ்ட் 13 ஆம் தேதி) உடன் நிறைவு பெறுகிறது. இந்த தேர்வு குறித்த விபரங்களை பார்க்கலாம்.
ஊதிய விவரங்கள்: குரூப் 2 (நேர்காணல் பதவிகள்): ₹36,900–₹1,35,100 (நிலை 16-18). குரூப் 2A (நேர்காணல் இல்லை): ₹19,500–₹1,15,700 (நிலை 8-16, பதவியைப் பொறுத்து மாறுபடும்).
குரூப் 2 பதவிகளில் உதவி ஆய்வாளர் (Labour) – 6 இடங்கள் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத்திறனாளி இல்லாதவர்) – 1 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத்திறனாளி) – 1 நன்னடத்தை அலுவலர் (புரோபேஷன் ஆபிஸர்) – 5 சார்-பதிவாளர் (கிரேடு-II) – 6 வனவர் (Forester) – 22 உள்ளிட்டவை அடங்கும்.
நேர்காணல் இல்லாத குரூப் 2 ஏ பதவிகளில் முதுநிலை ஆய்வாளர் (பால் உற்பத்தி) – 65 இடங்கள் உதவி ஆய்வாளர் (ஹிந்து சமய அறநிலையத்துறை) – 11 உதவியாளர் (வணிக வரித்துறை) – 13 முதுநிலை வருவாய் ஆய்வாளர் (Revenue) – 40 உதவியாளர் (பல்வேறு துறைகள்: பள்ளிக் கல்வி – 109, காவல்துறை – 41, மருத்துவம் – 74, மற்றவை) உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
நேர்காணல் இல்லாத குரூப் 2 ஏ பதவிகளில் முதுநிலை ஆய்வாளர் (பால் உற்பத்தி) – 65 இடங்கள் உதவி ஆய்வாளர் (ஹிந்து சமய அறநிலையத்துறை) – 11 உதவியாளர் (வணிக வரித்துறை) – 13 முதுநிலை வருவாய் ஆய்வாளர் (Revenue) – 40 உதவியாளர் (பல்வேறு துறைகள்: பள்ளிக் கல்வி – 109, காவல்துறை – 41, மருத்துவம் – 74, மற்றவை) உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
கல்வித் தகுதி: பொதுவாக, ஏதேனும் இளங்கலை பட்டம் (UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து) தேவை. சில பதவிகளுக்கு (எ.கா., வனவர், சார்-பதிவாளர்) குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் மற்றும் உடல்/மருத்துவ தகுதிகள் தேவை.
வயது வரம்பு (ஜூலை 1, 2025 அடிப்படையில்): பொது பிரிவு: 18 முதல் 32 வயது வரை (பதவியைப் பொறுத்து மாறுபடும்). SC/ST/MBC/BC/வறுமையில் உள்ள விதவைகள்: உச்ச வயது வரம்பு இல்லை (60 வயது வரை பணி நியமனம்). மாற்றுத்திறனாளிகள்: 10 ஆண்டுகள் கூடுதல் வயது தளர்வு. முன்னாள் படைவீரர்கள்: 50 வயது வரை.
இந்நிலையில் இந்த 2 தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி இரவு 11.59 மணியுடன் நிறைவு பெறுகிறது. இன்னும்1 நாளே இருப்பதால் தேர்வு கடைசி நேர அவசரத்தில் விண்ணப்பங்களை அனுப்புவதை தவிர்த்து விட்டு இப்போதே அனுப்பலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். விண்ணப்பிக்க வேண்டிய இணைய தள முகவரி : http://www.tnpsc.gov.in/