சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் மாதம் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தாண்டு (2025) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-I மற்றும் தாள் – II) நடத்துவதற்கு உத்தேசித்து அறிவிக்கையை (Website: http://www.trb.tn.gov.in) 11.08.2025 வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 11.08.2025 முதல் 08.09.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. ஆசிரியர் படிப்பு முடித்த மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதி தேர்வாகும்.
தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டு அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024 மார்ச் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்படி நடக்கவில்லை. அதன்பின், கடந்த ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. 2025 ஆம் ஆண்டிலாவது தகுதித் தேர்வுகள் அறிவிக்கப்படும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அறிவிக்கை வெளியாகியுள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 11.08.2025 முதல் 08.09.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தாள்-Iற் கான கணினி வழி தேர்வு நவம்பர் மாதம் 1ம் தேதி நடைபெறும் . தாள் -II ற் கான கணினி வழி தேர்வு நவம்பர் மாதம் 2ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தாள்-Iற் கான கணினி வழி தேர்வு நவம்பர் மாதம் 1ம் தேதி நடைபெறும் . தாள் -II ற் கான கணினி வழி தேர்வு நவம்பர் மாதம் 2ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாள் -2 தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் மற்றும் தொடர்புடைய இளங்கியல் கல்வியியல் பட்டமும் பெற்றிருக்க வேண்டும் (Graduation and passed or appearing in final year of 2-year Diploma in Elementary Education) .
தாள் – I ற்கு தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சியும் தொடக்க கல்வியில் பட்டய படிப்பும் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.