கர்நாடக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி குறித்த தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

ராகுல் காந்தி வெளியிட்ட மகாதேவபுரா வாக்காளர் பட்டியல் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப்பொறுப்பேற்றபின் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் உருவானது.
அப்படியிருக்க, அந்த வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பது குறித்து மாநில தலைமை அப்போது கண்ணைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தது ஏன் ? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ராஜண்ணாவின் இந்த பேச்சு கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் இன்று அவர் முதல்வர் சித்தராமையாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.