சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணி காரணமாக இன்று முதல் போக்குவரத்து மாற்றம்  செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணி காரணமாக இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  டிடிகே சாலையில் (ஆழ்வார்பேட்டை சிக்னல்–ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலை) 230 மீட்டர் நீள மழைநீர் வடிகாலை ஜிசிசி பழுதுபார்த்து வருகிறது. அதனால்,   11.08.25 முதல், ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இலகுரக வாகனங்களுக்கு மட்டுமே இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. எம்டிசி பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் சேவை சாலைகள் மற்றும் மாற்று வழிகள் வழியாக திருப்பி விடப்படுகின்றன.  அதன்படி,   மியூசிக் அகடாமி, மயிலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டை நோக்கி வரும் மாநகரப் பேருந்துகளின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.