கோவை: இரண்டுநாள் பயணமாக கோவை சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து உடுமலையில் ரோடு ஷோ நடத்தினார். திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மினி டைடல் பார்க் உள்பட பயனர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருப்பூர், உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திடலுக்கு மக்களை சந்தித்தபடியே சாலை மார்க்கமாக சென்ற மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து,  திருப்பூரில் ரூ.40 கோடியில் கட்டப்பட்ட டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.182 கோடி மதிப்பீட்டில் 35 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருப்பூர் மாவட்டத்தில் ரூ.950 கோடியில் முடிவுற்ற 61 திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்தது,  உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அதில், “திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.588 கோடியில் சாலைப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. 5 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கேயம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.10,490 கோடியில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பூரில் மாநகராட்சியில் ரூ.9 கோடியில் நவீன வசதிகளுடன் மாவட்ட மையம் நூலக கட்டடம் கட்டப்படும். ரூ.6.5 கோடியில் வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி மேற்கு மண்டலத்தில் தொடங்கும்,

“இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக,  உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வர் ஸ்டாலின் 1 கி.மீ. தொலைவு வரை நடந்து வந்து மக்களை சந்தித்தார். உடுமலைப்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதல்வருக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பயனாளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கியும் உரையாற்றினார்.

மு.க. ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த முதல்வர் ஸ்டாலின் விழா நடைபெறும் இடத்துக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பே, வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து வந்தார். வழியில் இருபுறமும் தன்னைக் காண காத்திருந்த மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார், அப்போது சில இடங்களில் பெண்கள் முதல்வர் காலில் விழுந்து வணங்கினர்.

இதைத்தொடர்ந்து,   கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, நீர்வளத் துறை அலுவலக வளாகத்தில் இன்று (11.08.2025) திங்கட்கிழமை காலை 11.45 மணியளவில் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத்திட்டம் உருவாக்கியவர்களின் திருவுருவச் சிலைகள் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டப் பணிகளின் போது உயிர்நீத்த தொழிலாளர்களுக்கான நினைவு அரங்கம், ஆகியவற்றை மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

மேலும், பொள்ளாச்சி நீர்வளத் துறை அலுவலக வளாகத்திற்கு ‘சி.சுப்பிரமணியம் வளாகம்’ மற்றும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரங்கங்களுக்கு ‘வி.கே.பழனிசாமி கவுண்டர் அரங்கம்’, ‘பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அரங்கம்’ எனப் பெயர்கள் சூட்டுகிறார்.