சென்னை: தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும்,  இலங்கை கடற்படையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும்  இன்றுமுதல் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி உள்ளனர்.

இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்  தொடங்கி உள்ளனர்.  700க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரியும், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களைக் கண்டித்தும் ,  மேலும், ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாயமானதை அடுத்து, அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஒரு சில இடங்களில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல்களால், மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என இது அனைத்து விசைப்படகு மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இன்றுமுதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ராமேஷ்வரம்,  ராமநாதபுரம் பகுதிகளில்,  700க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். 13ந்தேதி தங்கச்சி மடத்தில் ஆர்ப்பாட்டமும், 19ந்தேதி ரயில் மறியல் போராட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் இந்த  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால், வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வேலை இழப்பு. நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதோடு, கடலில் மீன் பிடிக்கும் தொழிலையும் இது பாதிக்கும். எனவே, இந்த வேலை நிறுத்தம் மீனவர்கள் மற்றும் அரசுக்கு இடையே ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகியுள்ளது.