சென்னை; அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகாமல்,  இரண்டு ஆண்டு தலைமறைவாக இருந்து ஜாமின் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதர் அசோக்குமார், இருதய வ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல  உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.

இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தை எதிர்த்து,  எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  கடந்த விசாரணையின்போது,  மனுதாரர் கோரிக்கைக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, மனுதாரர் சிகிச்சைக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்றது.  அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், அமெரிக்காவில் சிகிச்சை பெற உள்ள தேதி உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்தார்.

இதையடுத்து,  அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், ஒருவேளை அசோக்குமார் வெளிநாடு செல்ல அனுமதியளித்தால் அவரது மனைவியின் பாஸ்போர்ட்டை ஒப்படைப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்க வேண்டுமென்று கோரினார்.

அசோக்குமாருடன் அவரது மனைவியும் அமெரிக்கா செல்ல உள்ளதால் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க இயலாது எனவும் அவரது மகளின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அசோக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு ஆகஸ்டு 8ந்தேதி அன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் மகளின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். மனுதாரர் நிபந்தனையாக ரூ.5 லட்சம் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அசோக்குமார் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் இன்று திடீரென நீதிமன்றத்தில் ஆஜர்

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவு – 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் டிமிக்கி…

தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் பங்களா வீட்டில் வருமான வரித்துறை சோதனை…