பெங்களூரு: டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் தர மறுப்பது ஏன்? எங்களை மிரட்டுவது ஏன்?  என தேர்தல் ஆணையத்தை சாடியுள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் ஆணையத்துக்கு  5 கேள்விகளை எழுப்பி உள்ளார்.

‘தேர்தல் கமிஷனுக்கு எதிரான உங்களது குற்றச்சாட்டுகள் உண்மை என நம்பினால், சத்திய பிரமாணத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லை எனில், நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு தேர்தல் கமிஷன்  பதில் கொடுத்துள்ளது.

ராகுல்காந்தி எழுப்பியுள்ள 5 கேள்விகள்:

1. இந்திய மக்களுக்கு டிஜிட்டல், இயந்திரம் படிக்கக்கூடிய வடிவத்தில் வாக்காளர் பட்டியலை ஏன் வழங்கவில்லை?
2. வீடியோ ஆதாரங்களை ஏன் அழிக்கிறீர்கள்?
3. வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் ஏன் மிகப்பெரிய மோசடியைச் செய்கிறது?
4. தேர்தல் ஆணையம் எங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக எதிர்க்கட்சிகளை ஏன் அச்சுறுத்துகிறது?
5. தேர்தல் ஆணையம் ஏன் பாஜகவின் முகவராக நடந்து கொள்கிறது?

பீகாரில் நடைபெற்றுள்ள தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, ராகுல்காந்தி,  ‘நான், பார்லிமென்டில் சத்திய பிரமாணம் செய்திருக்கிறேன் என்றவர்,  கர்நாடக மாநிலத்தில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாகவும், பல மாநிலங்களில் வாக்கு திருட்டு மூலமே பாஜக வெற்றி பெற்றுள்ளது என குற்றம்சாட்டிய ராகுல்காந்தி,  இது  அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் என சாடியுள்ளார்.  மேலும், இந்த செயலுக்கு உடந்தையான ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் பிடிபடுவார்கள் என்று கூறியுள்ள ராகுல், உயர் பதவியில் இருந்தாலும் சரி, கடைநிலையில் பணியாற்றினாலும் சரி, அவர்களை தண்டிப்பது நிச்சயம் என்று சூளுரைத்துள்ளார்.

ராகுலின் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய தேர்தல் கமிஷன்,  தேர்தல் கமிஷனுக்கு எதிரான தன் குற்றச்சாட்டுகள் உண்மை என நம்பினால், சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடுவதில் காங்., – எம்.பி., ராகுலுக்கு எந்த பிரச்னையும் இருக்கக் கூடாது. அப்படி கையெழுத்திட மறுத்தால், தன் குற்றச்சாட்டுகளை அவர் நம்பவில்லை என அர்த்தம் என்று கூறியுள்ளது.

ராகுலுக்கு இரண்டே வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, சத்திய பிரமாணத்தில் கையெழுத்திடுவது. மற்றொன்று, தேர்தல் கமிஷனுக்கு எதிராக தான் கூறிய குற்றச்சாட்டுகள் பொய் எனக்கூறி, நாட்டு மக்களிடையே மன்னிப்பு கேட்பது.

மேலும், பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாகவும் ராகுல் கேள்வி எழுப்பியிருந்தார். செப்., 1 வரை ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளோம். ராகுல் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. வழக்கம்போல காலக்கெடு முடிந்த பின் தெரிவிப்பார் என நினைக்கிறோம்.

இதற்கிடையில்,   முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கும் கர்நாடகாவின் பெங்களூரில், ‘எங்கள் ஓ ட்டு, எங்கள் உரிமை’ என்ற பெயரில், அக்கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி,   குற்றச்சாட்டுகள் தொடர்பாக சத்திய பிரமாணத்தில் கையெழுத்திடும்படி தேர்தல் கமிஷன் என்னிடம் கேட்கிறது. நான், பார்லிமென்டில் சத்திய பிரமாணம் செய்திருக்கிறேன். இதைவிட வேறு என்ன வேண்டும்? நான் கூறிய விபரங்களின் அடிப்படையில் நாட்டு மக்கள் கேள்வி எழுப்புவர் என்ற பீதியால், இணையதளத்தை தேர்தல் கமிஷன் முடக்கி உள்ளது.

கடந்த தேர்தலில் அரசியல் சாசனத்துக்கு எதிராக மோடி நடந்து கொண்டார். அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் அமைப்புகளை ஒழிக்கும் வேலையை செய்து வருகிறார். பிரதமர் மோடி, வெறும் 25 சீட்களில் வென்று பிரதமரானார். அந்த 25 தொகுதிகளில், வெறும் 35,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து நான் மட்டுமல்ல, அனைத்து அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்புகின்றனர்.

வாக்காளர் பட்டியலில் நடந்துள்ள முறைகேடுகளை மூடி மறைத்ததன் மூலம், பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் உதவியுள்ளது. டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் தர மறுப்பது ஏன்? வீடியோ சாட்சிகளை அழிப்பது ஏன்? எங்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் மிரட்டுவது ஏன்?  என கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக 5 கேள்விகளை எழுப்பி, அதற்கு பதில் கோரியுள்ளார்.

1. இந்திய மக்களுக்கு டிஜிட்டல், இயந்திரம் படிக்கக்கூடிய வடிவத்தில் வாக்காளர் பட்டியலை ஏன் வழங்கவில்லை?
2. வீடியோ ஆதாரங்களை ஏன் அழிக்கிறீர்கள்?
3. வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் ஏன் மிகப்பெரிய மோசடியைச் செய்கிறது?
4. தேர்தல் ஆணையம் எங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக எதிர்க்கட்சிகளை ஏன் அச்சுறுத்துகிறது?
5. தேர்தல் ஆணையம் ஏன் பாஜகவின் முகவராக நடந்து கொள்கிறது?

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள  உ.பி., தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  , ‘ராகுல் கூறுவது போல, உ.பி.,யின் லக்னோ, வாரணாசியில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. அவரது குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம். அவை முற்றிலும் தவறானவை’ என தெரிவித்து உள்ளார்.

இனி உங்களை தொட விட மாட்டோம் – “எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“! தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

பாஜக உடன் கள்ள கூட்டணி வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் குளறுபடி : ராகுல் காந்தி ஆதாரத்துடன் குற்றச்சாட்டு