சென்னை : சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில்  ஆகஸ்ட் 11ல் முதல்முறையாக குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஏசி பேருந்துகள் சென்னை  பெரும்பாக்கம் பணிமனையில் இருந்  இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையின் எல்லை  விரிந்து வரும் நிலையில், மக்களின் தேவையை பூர்த்தி செய்ய பேருந்துகள், ரயில்கள் இயக்கமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,  டீசல் பேருந்துகளால் அதிக அளவில் மாறு ஏற்படுவதால்,. அதை மாற்றி, சிஎன்ஜி பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து,   தனியார் பங்களிப்போடு சென்னையில், 1,000 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. அதனப்டி,    625 மின்சார பேருந்துகளை இயக்க, ‘அசோக் லேலண்ட்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘ஓ.எச்.எம்., குளோபல் மொபிலிடி பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், 225 ‘ஏசி’ பேருந்துகள், 400 ‘ஏசி’ இல்லாத பேருந்துகள்.

இந்த வகை பேருந்துகள் ஜுன் 30ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக 120 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை, புறநகருக்கும் சேர்த்து மின்சார பேருந்துகளை இயக்க, 45 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், 10க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், மின்சார பேருந்து சேவை முதலில் இயக்கப்படுகிறது.  இதற்காக,  வியாசர்பாடி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பல்லவன் இல்லம், பூந்தமல்லி ஆகிய பணிமனைகளில் 100.69 கோடி ரூபாயில் ‘சார்ஜிங்’ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது முதன்முறையாக ஏசி மின்சார பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆகஸ்டு 11ந்தேதி இந்த பேருந்துகள் தொடக்க விழா நடைபெறுகிறது. சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.   பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து 55 குளிா்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளையும், 80 சாதாரண மின்சார பேருந்துகளையும் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரும் ஆக. 11ம் தேதி முதல் இந்தப் பேருந்துகளின் சேவை தொடங்கப்படும். தொடா்ந்து பிற பணிமனைகளில் இருந்தும் மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.