நெட்டிசன்
மூத்த பத்திரிகயாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு சைக்கோ- கோமாளி மற்றும் முக்கிய நேரங்களில் முழுக்க முழுக்க ஆளுங்கட்சி அல்லக்கை என்று பல ஆண்டுளாக இங்கே சுட்டிக்காட்டி வருகிறோம்..
Tent of fools என்பார்கள். அப்படி ஒரு முட்டாள்களின் கூடாரமாக இந்திய தேர்தல் ஆணையம் மாறி பல ஆண்டுகள் ஆகின்றன. அதை காரி துப்பி நாம் போட்ட பல பதிவுகளில் சிலவற்றை இங்கே நினைவு கூறுகிறோம்..
EC…சைக்கோ கோமாளி – 1 21.02.2021.
தேர்தல் ஆணையமே, ஒரு சைக்கோ காமெடியன்தான்..
தற்போது தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் சட்டசபைகளின் ஆயுட்காலம் முடிய ஏறக்குறைய இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன.. ஐந்தாண்டு மக்களாட்சி என்கிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பு, ஆளும் அரசாங்கங்களுக்கு கொடுப்பதோ வெறும் 57 மாதங்கள்தான்.. மீதி மூன்று மாதங்கள் தேர்தல் ஆணையத்தின் ஆட்சிதான்.
வெவ்வேறு ஆயுட்காலம் கொண்ட மாநிலங்களுக்கு பொத்தாம் பொதுவாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துகிறார்கள்..
காலை மதியம் ராத்திரி என மூன்றுக்கும் சேர்த்து, ராத்திரி வருபவனுக்காக ஒரே வேளையில் மட்டுமே சமைப்போம். அப்போது வந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள். அதுவரை பட்டினி கிடங்க என்று சொல்லுகிறார்கள்..
மே 2ஆம் தேதி எண்ணப்படுகிற வாக்குகளுக்கு, ஏப்ரல் 6ஆம் தேதியே தேர்தல். 27 நாட்களுக்கு வாக்குப் பெட்டிகளுக்கு பக்கத்தில் அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் வேட்பாளர்களும் அவர்களின் முகவர்களும் படுத்துக் கிடக்க வேண்டும்.. எவ்வளவு வெட்டி வேலை? எவ்வளவு தண்டச் செலவு..
ஆறு மாதத்துக்கு முன்பே தேர்தல் தேதியை அறிவித்து விட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வந்தாலும் வேடிக்கை பார்க்கப் போகிறோம்..
நாம் அளித்த வாக்கை அவர்கள் மூன்று மாதங்கள் எண்ணாமல் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் வேடிக்கை தான் பார்க்கப்போகிறோம். கேட்டால், நாங்கள் ஜனநாயகத்தை காக்க வேண்டிய அரசியல் சாசன அமைப்பு என்பார்கள்..
தேர்தல் நேரத்தில் ஏகப்பட்ட உதார் விட்டு, விதி மீறல்கள் என பல்லாயிரம் வழக்குகளை பதிவு செய்வார்கள்.. ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டால், அதையும் சொல்ல மாட்டார்கள்..