சென்னை: திமுகவின் கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 19 போலி என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளதாக, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. போலி என்கவுண்டர் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், முக்கிய குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர், சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்துச்செல்லப்படும்போது, அவர் காவல்துறையினரை தாக்க முயன்றதாக கூறி என்கவுண்டர்கள் நடைபெறுகிறது. ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இரண்டு பேரை என்கவுண்டர் செய்யப்பட்டது பேசும் பொருளாக மாறியது. விசாரணையே தொடங்காத நிலையில், அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் விவாதப் பொருளாக மாறியது.
இதற்கிடையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள மூங்கில் தொழுவு பகுதியில் தந்தை மகன்களுக்கு இடையே போதை காரணமாக நடைபெற்ற மோதலின்போது, சமாதானம் செய்த போலீஸ் எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை செய்பப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இரண்டுபேர் சரணடைந்த நிலையில், கொலையாளி என கருதப்பட்ட நபர், அடுத்த நாள் காலை 10.30 மணியளவில் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைய முயன்றார். அவரை அந்த பகுதி நீதிபதி இது தமது அதிகார எல்லைக்குள் வராது எனக் கூறி, மனுவை பெற்றுக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் திருப்பூர் மாவட்ட போலீசாரிடம் சரணடைந்தார். ஆனால், சரணடைந்த சில மணி நேரங்களிலேயே, அவர் போலீசாரை தான் மறைத்து வைத்திருந்த போலீசாரை தாக்க முயற்சித்தால், மணிகண்டன் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சமூக நல அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் இது போலி என்கவுண்டர் என கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம். காவல்துறையின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளது,. திமுக ஆட்சியின் கடந்தர நான்கரை ஆண்டு கால ஆட்சியில் மட்டும் 19 போலி என்கவுண்டர் நடைபெற்றுள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளதுடன், இந்த சம்பவங்கள் குறித்து, மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.